31 Dec 2014

ஆலையடிவேம்பு பிரதேசசபையின் வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றம்

SHARE
அம்பாறை - ஆலையடிவேம்பு பிரதேச சபையின் 2015 ஆண்டு வரவு செலவு திட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை (30) உள்ளுராட்சி கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் தவிசாளரின் மேலதிக ஒரு வாக்கினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆட்சி அதிகாரத்திலுள்ள ஆலையடிவேம்பு பிரதேச சபையின் 45வது கூட்டத் தொடர் திங்கற்கிழமை (29) இடம்பெற்றது.

இதில் கணக்கறிக்கை கூட்டறிக்கையில் சமர்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்ட திருத்தத்திற்கு விடப்பட்டு அதில் சேர்க்கப்பட்ட திருத்தங்களுடன் மீண்டும் சமர்ப்பிப்பதற்காக கூட்டத் தொடர் நேற்று வரை ஒத்திவைக்கப்பட்டது.

இதனையடுத்து நேற்று காலை 09.00 மணிக்கு தவிசாளர் தலைமையில் வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.

வாக்களிப்பில் இருபக்கமும் 4 ற்கு 4 என சமபலம் கொண்டதையடுத்து தவிசாளர் உள்ளுராட்சி மன்றத்தின் 1987 ம் ஆண்டு 15 ம் இலக்க கட்டளைச் சட்டத்தின் 14 (2) அமைவாக தவிசாளருக்கு இருக்கும் மேலதிக வாக்கொன்றை பிரயோகித்து வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றினார்.(ad)
SHARE

Author: verified_user

0 Comments: