குச்சவெளி பிரதேசசெயலக பிரிவிற்குட்பட்ட கோபாலபுரம் கிராமம் தொடர்ச்சியாக பெய்து கொண்டு வரும் அடைமழை காரணமாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் குடியிருப்புக்களில் நீர்தேங்கி காணப்படுவதுடன் இக்கிராம மக்களின் ஜீவனோபாய தொழிலான விவசாயம். கடற்றொழில் என்பன முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. கடல் கொந்தளிப்பாக இருப்பதனால் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. அத்துடன் மக்கள் அன்றாட கடமைகளை மேற்கொள்ள முடியாதுள்ளனர்.
மேலும் இக்கிராமத்தில் பயிரிடப்படும் பப்பாசி> வெண்காயம்> மிளகாய் வாழை மரவெள்ளி ஆகிய தோட்டங்களும்> திவிநெகும திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட பயிரினங்களும் நீர் தேங்கி நிற்பதன் காரணமாக அழிவடையும் நிலையிலுள்ளதுடன் தொற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகளும் உள்ளன..
0 Comments:
Post a Comment