தாழமுக்க
பிரதேசமானது இலங்கையின் கிழக்குக் கரையோரத்திற்கு அருகாமையில் தற்போது
நிலைகொண்டுள்ளதுடன் வடக்கு நோக்கி நகர்ந்து வருகின்றது.
இதனால்
நாடு மற்றும் சுற்றியுள்ள கடற்பிரதேசங்களில் தொடர்ந்தும் காலநிலையில்
தாக்கம் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை (28.12.2014)
வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவித்தலில் தெரிவித்துள்ளது.
தாழமுக்க
நிலைமை காரணமாக கிழக்கு, வடக்கு, வடமத்திய, வடமேல், மத்திய மற்றும் ஊவா
மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை இடம்பெறும். அத்துடன்
காற்றானது மணித்தியாலயத்திற்கு 40 - 50 கிலோமீற்றர் வரையிலான வேகத்தில்
வீசுவதுடன், இடிமின்னலுடனான மழைவீழ்ச்சியின்போது மணித்தியாலயத்திற்கு 80
கிலோமீற்றர் வரையிலான வேகத்தில் இடம்பெறக்கூடும் எனவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment