ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக்
கூட்டமைப்பிலிருந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெளியேறுவதாக அறிவித்ததை
அடுத்து அக்கட்டசியின் தலைவர் ரவூப் ஹக்கீம், எச்.எம்.எம்.ஹரீஸ் எம்.பி
உள்ளிட்ட கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள்
சகிதம் கிழக்கு மாகாணத்தை நோக்கி தனது பயணத்தினை ஆரம்பித்துள்ளனர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் இன்று காலை
இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இந்த அறிவிப்பினை மேற்கொண்டார்.
இதனையடுத்து ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனாவிற்கு ஆதரவாக
இன்றிலிருந்து பிரசாரத்தில் ஈடுபடுமாறு கட்சியின் முக்கியஸ்தர்களுக்கும்
அவர் உத்தரவிட்டார்.
அத்துடன் கிழக்கு மாகாணத்தின் காத்தான்குடி, கல்முனை, சம்மாந்துறை மற்றும்
பொத்துவில் போன்ற பிரதேசங்களில் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை
ஆதரித்து தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கும் கூட்டங்களில் கலந்து
கொள்வதற்காக மு.கா தலைவர் ஹக்கீம் உள்ளிட்ட குழுவினர் தற்போது கிழக்கு
மாகாணத்தை நோக்கி பயணிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment