31 Dec 2014

முச்சக்கர வண்டிகளின் சாரதிகளுக்காக புதிய காப்புறுதி முறை அறிமுகம்

SHARE
2015ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட ஆலோசனைகளின் படி முச்சக்கர ண்டிகளின் சாரதிகளுக்காக புதிய காப்புறுதி முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

விவசாய அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் அண்மையில் கனங்கே ஆயுர்வேத மத்திய நிலையத்தில் இது தொடர்பான நிகழ்வு இடம்பெற்றது.

"பயங்கரவாதத்தினால் எமது அன்றாட வாழ்க்கை சீர்குலைந்த இருண்ட யுகத்தை நாம் மறக்கவில்லை நினைத்த நேரமெல்லாம் ஊரடங்கு சட்டம் அமுல்நடத்தப்பட்டதனால் எமது அன்றாட வாழ்க்கையில் ஏற்பட்ட இன்னல்கள் கொஞ்சமல்ல. அக்கால பகுதியில் அரசியல்வாதிகள் மரணச்சடங்குகளில் கலந்துக்கொள்ளவே காலத்தை செலவிட்டனர்.

அத்தகைய யுகத்தை மாற்றி இன்று அபிவிருத்திப்பாதைக்கு எம்மை இட்டுச்சென்றது இன்றைய அரசாங்கமேயாகும் எனவும் இத்தகைய நல்லதொரு எதிர்காலத்தை இல்லாமற்செய்ய மக்கள் தயாரில்லை" எனவும் அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன இங்கு உரையாற்றும் போது தெரிவித்தார்.(nl)
SHARE

Author: verified_user

0 Comments: