நாட்டில்
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்காளர்
அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் ஜனவரி 3 ஆம் திகதி வரை
நீடிக்கப்பட்டிருப்பதாக தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.
வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள்
எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதி வரையுமே நடைபெறும் என முன்னர்
அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், நாட்டில் நிலவிவரும் மோசமான காலநிலை
காரணமாக வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் 3 ஆம் திகதிவரை
நீடிக்கப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட்
தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment