நாட்டின் 22
மாவட்டங்களில் நிலவும் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு போன்ற
அனர்த்தங்களால் சுமார் 10 இலட்சத்து 25 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள்
பாதிக்கப்பட்டிருப்பதுடன்,இதுவரை 24 பேர்உயிரிழந்துள்ளனர்..அனர்த்த
முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட 31,188 குடும்பங்களைச்
சேர்ந்த ஒரு இலட்சத்து 9ஆயிரம் பேர் 688 நலன்புரி நிலையங்களில்
தங்கவைக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதிலும் இதுவரை 4684 வீடுகள் முற்றாக
சேதமடைந்திருப்பதுடன், 14 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் பகுதியளவில்
சேதமடைந்துள்ளன.
பதுளை மாவட்டத்தில் மண்சரிவு காரணமாக 14 பேர் உயிரிழந்துள்ளனர். மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கால் நாடு முழுவதிலும் 18 பேர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
பல்வேறு குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறந்திருப்பதால் அவற்றை அண்டியுள்ள தாழ் நிலப் பகுதிகளில் வெள்ள மட்டம் அதிகரித்து வருகிறது.கிழக்கு மாகாணத்தில் மாத்திரம் 8 இலட்சத்து 29 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 4 இலட்சத்து 93 ஆயிரம் பேரும், அம்பாறை மாவட்டத்தில் 2 இலட்சத்து 89 ஆயிரம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். பொலன்னறுவை மற்றும் அநுராதபுரம் மாவட்டங்களில் 42 ஆயிரத்து 601 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பதுளை மாவட்டத்தில் மண்சரிவு காரணமாக சுமார் 8500 பேர் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளனர்.பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை துரிதமாக வழங்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மாவட்ட செயலாளருகளுக்கு பணிப்பரை விடுத்துள்ளார்.(nl)

0 Comments:
Post a Comment