31 Dec 2014

2015 ஜனவரி 5ஆம் திகதி நள்ளிரவுடன் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்குத் தடை

SHARE
2015 ஜனவரி 5ஆம் திகதி நள்ளிரவுடன் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் முடிவடைகிறது.எனவே ஜனவரி 5ஆம் திகதி நள்ளிரவுக்குப்பின்னர் தேர்தல் அலுவலகங்களில் போஸ்டர்கள் கட்அவுட்கள் காட்சிப்படுத்தப்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

இதன்படி, தேர்தல் அலுவலகங்களில் தற்சமயம் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அனைத்து போஸ்டர்கள் கட்அவுட்கள் மற்றும் அலங்காரங்கள் அனைத்தும் அன்றைய தினமே அகற்றப்பட வேண்டும் எனவும் சகல கட்சிகளையும் ஜனாதிபதி வேட்பாளர்களையும் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய கேட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனவரி 6ஆம் திகதி முதல் மாவட்ட மட்டத்திலும் பிரதேச மட்டத்திலும் பொலீஸ் அதிகாரிகளை உள்ளடக்கிய குழுவினர் சென்று இதுபற்றி சோதனை நடத்தவுள்ளனர்.

வ்வாறே, ஜனவரி 7ஆம்திகதி காலை முதல் தேர்தல் தொகுதிகள் தோறும் தேர்தல் சட்டதிட்டங்களுக்கு புறம்பாக அமைந்துள்ள கட்சி காரியலயங்களை நீக்குவதற்கு நடவடிக்கை எடுப்பர் எனவும் ஆணையாளர் மேலும் தெரிவித்தார் .
SHARE

Author: verified_user

0 Comments: