17 Nov 2014

அரசடித்தீவு விக்கினேஸ்வரா மகா வித்தியாலயத்தில் சாதனையாளர் பாராட்டு விழா

SHARE

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட அரசடித்தீவு விக்கினேஸ்வரா மகா வித்தியாலயத்தில் சாதனையாளர் பாராட்டு விழாவும், தீவொளி சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வும் வித்தியாலயத்தின் அதிபர் க.தியாகராசா தலைமையில் வித்தியாலய மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (14) இடம்பெற்றது.

இதன்போது பாடசாலைக்கு சாதனையை ஈட்டிக்கொடுத்த சாதனையாளர்களை பாராட்டி, கௌரவித்து, சான்றிதழ்கள் மற்றும் நினைவுப் பரிசில்கள் என்பன வழங்கப்பட்டன.

பாடசாலை வரலாற்றில் முதலாவது தடவையாக இச்சாதனையாளர் பாராட்டு விழாவு தீவொளி சஞ்சிகையும் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தீவொளி சஞ்சிகையில் சாதனையாளர்களின் விபரங்கள், பாடசாலை வரலாறு, ஆசிரியர்கள், மாணவர்களது ஆக்கங்கள் அடங்கிய பொக்கிசமாக இச்சஞ்சிகை அமையப்பெற்றுள்ளது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் வலயக்கல்விப் பணிப்பாளர் க.சத்தியநாதன், கொக்கட்டிச்சோலை தாந்தோன்றீஸ்வரர் ஆலய பிரதமகுரு, மற்றும் பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள், உதவிக்கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக்கல்விப் பணிப்பாளர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் தலைவர்கள், உத்தியோகத்தர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், ஏனைய பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றார்கள், கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.














SHARE

Author: verified_user

0 Comments: