29 Nov 2014

காணி உறுதிப்பத்திரம் வழங்கல்

SHARE
கிண்ணியா பிரதேச செயலகத்துக்குட்பட்ட பிரதேசத்தில் நீண்ட காலமாக காணி உறுதிப்பத்திரம் வழங்கப்படாமல் இருந்து வந்த குடும்பங்களுக்கு, காணி உறுதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (28) கிண்ணியா மத்திய கல்லூரி அப்துல் மஜீத் மண்டபத்தில் இடம்பெற்றது.

இவ்வைபவத்தில் 174 குடும்பங்களுக்கு காணி உறுதிப்பத்திரங்களை வழங்கி வைக்கப்பட்டன.

பிரதேச செயலாளர் எம்.ஏ.அனஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதிகளாக கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத், திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் கலந்த கொண்டனர். 

சிறப்பு அதிதிகளாக, உதவிப் பிரதேச செயலாளர் யூ.அஜீதா, உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஐ.முஜீப் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
SHARE

Author: verified_user

0 Comments: