கல்முனை மாநகர சபைக்குட்பட்ட
சாய்ந்தமருது இரண்டாம் பிரிவு ஜமாஹிரியா வீதியிலுள்ள வீடு ஒன்றில் இன்று
(27) இரவு 8.15 மணியளவில் மின் கசிவினால் திடீரென பிடித்த
தீயினால் எம். லாபீர் என்பவரது வீடு முற்றாக சேதமாகியுள்ளது.
இத்தீயினை அணைக்க அயலவர்கள் முயற்சித்த போதும் பயனிலிக்காமல் இத்தீ பரவி வீடு முற்றாக சேதமடைந்துள்ளது,
சம்பவ இடத்திற்கு விரைந்த கல்முனை பொலிஸார், கல்முனை மாநகர சபையின்
தீயணைப்பு பிரிவு, பொதுமக்கள் ஆகியோரின் முயற்சியினால் தற்போது தீ
கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டாலும், வீடு முற்றாக சேதமடைந்துள்ளது.
இந்நிலையில் குறித்த வீட்டு உடமையாளரின் மனைவியும் அவரது பிள்ளைகளும்
வீட்டில் இருந்துள்ளனா். திடீரென ஏற்பட்ட ஒளித் தெரிப்பினால் தீ பற்றி
எரிந்தவுடன் அவா் தனது பிள்ளைகளுடன் வெளியில் ஓடியுள்ளார். இதனை அடுத்து
வீடு தீப்பற்றி எரிந்துள்ளது.
இத்தீ விபத்து மின் ஒழுக்கு காரணமாக ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதும்
காரணங்கள் உள்ளதா? என்பது தொடர்பாக கல்முனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை
மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments:
Post a Comment