27 Nov 2014

கல்முனை மண்ணில் பிறந்த பலர் பல்வேறுபட்ட துறைகளில் முதன்மை பெற்று இம்மண்ணுக்கு பெருமை சேர்த்துத் தந்துள்ளார்கள்.

SHARE
கல்முனை மண்ணில் பிறந்த பலர் பல்வேறுபட்ட துறைகளில் முதன்மை பெற்று இம்மண்ணுக்கு பெருமை சேர்த்துத் தந்துள்ளார்கள்.
இதில் பெண் முயட்சியாளர்கள், தாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதை பறைசாற்றுவது போன்று பல்வேறு துறைகளில் சாதனைகளை படைத்துள்ளனர்.
இந்த வரிசையில் அண்மையில் கல்முனையைப் பிறப்பிடமாக கொண்ட சட்டத்தரணி மர்யம் (மரீனா) மன்சூர் நளீமுதீன் அவுஸ்திரேலியாவில் சட்டத் தொழிலை புரிவதற்காக அவுஸ்திரேலியாநாட்டு பல்கலைகளகத்தினால் (University of Adelaide ) நடாத்தப்படும் அனைத்து அவுஸ்திரேலியா நாட்டுச் சட்டப்பாடங்களிலும் திறமைச் சித்தி பெற்று அந்நாட்டு உயர்நீதிமன்ற நீதிபதியாக சத்தியப்பிரமாணம் செய்ய தகமை பெற்றுள்ளார்.
இதே சமயம் சட்ட முதுமாணி படிப்பினையும் அந்நாட்டில் இவர்மேல் கொண்டு வருகிறார்.
இவர் கல்முனையைச் செதுக்கிய சிப்பி எம்.எஸ்.காரியப்பரின் பேத்தியும், முன்னாள் வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் ஏ. ஆர். மன்சூரின் கனிஷ்ட புதல்வியும் டாக்டர் எஸ்.நளீமுதீனுடைய மனைவியுமாவார்.
இலங்கையில், குறிப்பாக கிழக்கு மாகாணத்தை சேர்ந்த பெண் ஒருவர் மேற்குலகநாட்டில் இவ்வாறான ஒரு தகமையை பெற்று இருப்பது அனைவருக்கும் பெருமை சேர்க்கும் ஒரு விடயமாக இருப்பதுடன் கல்வியில் ஆர்வம் கொண்ட பெண்களுக்கு இவர் ஒரு முன்மாதிரியாகவும் திகழ்கிறார்
SHARE

Author: verified_user

0 Comments: