13 Nov 2014

ஜனாதிபதிக்கும் நாட்டு மக்களுக்கும் நல்லாசி வேண்டி விசேட பூஜை

SHARE
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பிறந்த தினத்தை முன்னிட்டு தமது பிரதேசத்திற்குட்பட்ட பிரபலமான இந்து ஆலயம் ஒன்றில் எதிர்வரும் 18 ஆம் திகதி காலை 8 மணிக்கு ஜனாதிபதிக்கும் நாட்டு மக்களுக்கும் நல்லாசி வேண்டி விசேட பூஜை ஒன்றினை நடாத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப் பட்டுள்ளதாக போரதிவுப்பற்று பிரதேச இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகஸ்தர் சி.உதயமலர் கூறினார்.


இந்து கலாசார அலுவல்கள் பணிப்பாளர் சாந்தி நாவுக்கரசனின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக இந்நிகழ்வு எற்பாடு செய்யப் பட்டுள்ளது.


போரதிவுப்பற்று பிரதேசத்தில் அமைந்துள்ள பிரபலமான களுமுந்தன்வெளி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தில் அவ்வாலய நிருவாகத்தினரின் ஒத்துழைப்புடன் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது.


இதன்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதி அமைப்பாளர் சாணக்கியன் இராசமாகணிக்கம், போரதீவுப்பற்று பிரதேச கலாசராச உத்தியோகஸ்தர் ச.சோமசுந்தரம், உட்பட பலர் கலந்து கொள்ளவுள்ளதாகவும் போரதிவுப்பற்று பிரதேச இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகஸ்தர் சி.உதயமலர் மேலும் கூறினார்.

SHARE

Author: verified_user

0 Comments: