அல் கிம்மா சமூக சேவைகள் அமைப்பு நாடளாவிய இரீதியில் பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது.
அதனடிப்படையில், ஓட்டமாவடிப் பிரதேச செயலாளர் பிரிவில் பாடசாலை செல்லும் மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகளும் வறிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் வாழ்வாதரத்தை முன்னேற்றும் வகையில், தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்வும் 10ம் திகதி இடம்பெற்றது.
எஸ்.ஐ.எம்.சாதாத் ஆசிரியர் தலைமையில் ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலயத்தில் இடம் பெற்ற நிகழ்வில், பிரதம அதிதியாக அல்-கிம்மா நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷேக் எம்.எம்.எஸ்.ஹாறூன் (ஸஹவி) கலந்து கொண்டார். ஏனைய அதிதிகளாக, அல்-கிம்மா நிறுவனத்தின் பிரதிப்பணிப்பாளர் ஏ.எல்.ஜாபீர், ஓட்டமாவடி பாதிமா பாலிகா மகா வித்தியாலயத்தின் அதிபரும் அல்-கிம்மா நிறுவனத்தின் ஆலோசனை சபை உறுப்பினருமாகிய ஏ.எல். நெய்னா முஹம்மட், ஓய்வு பெற்ற கோட்டக்கல்வி அதிகாரியும் அல்-கிம்மா நிறுவனத்தின் ஆலோசனை சபை உறுப்பினருமாகிய ஏ.எம்.ஏ. காதர், அல்-கிம்மா நிறுவனத்தின் செயலாளர் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
ஓட்டமாவடி தேசிய பாடசாலை மற்றும் ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலயம் என்பவற்றில் கல்வி பயிலும் அயல் கிராமங்களிலிருந்து கால் நடையாக வரும் மாணவ-மாணவிகள் இணங்காணப்பட்டு, அவர்களில் முதற்கட்டமாக ஓட்டமாவடி பாதிமா பாலிகா மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் ஏழு மாணவிகளுக்கும், ஓட்டமாவடி மத்திய கல்லூரியில் கல்வி பயிலும் ஐந்து மாணவர்களுக்குமாக பன்னிரெண்டு மாணவ-மாணவிகளுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டதோடு வறிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் வாழ்வாதரத்தை முன்னேற்றும் வகையில், மூன்று குடும்பப் பெண்களுக்கு தையல் இயந்திரங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
0 Comments:
Post a Comment