23 Nov 2014

சிவில் பாதுகாப்புக் குழுக் கூட்டம்

SHARE

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ பிரிவுக்குட்பட்ட களுதாவளை மத்தி பிரிவுக்குரிய சிவில் பாதுகாப்புக் குழுக் கூட்டம் இன்று  ஞாயிற்றுக் கிழமை (23) களுதாவளை மத்தி பொதுக்கட்டடத்தில்ல் நடைபெற்றது.

இதன்போது களுதாவளைப் பிரதேசத்தில் மக்கள் மத்தியல் ஏற்படும் பொதுவான பிரச்சனைகளை எவ்வாறு கையாள்வது, சிவில் பாதுகாப்புக் குழுவுக்கும் பொலிசாருக்கும் இடையில் காணப்படும் அன்னியோன்னியம், மக்களை எவ்வாறு சிவில் பாதுகாப்பக்குழு கையாளுதல், பிரச்சனைகள் வராமல் எவ்வாறு தடுத்தல், பொன்ற பல விடையங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டதாக களுதாவளை மத்திக்குரிய பொலிஸ் கொஸ்தாம்பிள் திலக் அமரசூரிய கூறினார்.


களுதாவளை மத்திக்குரிய பொலிஸ் கொஸ்தாம்பிள் திலக் அமரசூரிய தலைiமில் நடைபெற்ற இந்நிகழ்வில் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சனத் நந்தலால், கிராம சேவை உத்தியோகஸ்தர் திருமதி.ச.தனலெட்சுமிமி, மற்றும் சிவில் பாதுகாப்புக் குழு அங்கத்தவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.







SHARE

Author: verified_user

0 Comments: