மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் வினாயகமூர்த்தி முரளிதரனின் கல்குடா தொகுதிக்கான இணைப்பாளராகவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வாழைச்சேனை மற்றும் கிரான் பிரதேச அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ள தாமோதரம் உதயஜீவதாஸ் தனது நியமனக் கடிதத்தினை பிரதியமைச்சரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பிரதித் தலைவருமான வினாயகமூர்த்தி முரளிதரனிடமிருந்து பெற்றுக்கொள்வதைக் காணலாம்.
கட்சியின் கிரான் கிளைத் தலைவர் கே.உதயகுமார் உள்ளிட்ட பிரமுகர்களும் அருகில் காணப்படுகின்றனர்.
தாமோதரம் உதயஜீவதாஸ் கலைக்கப்பட்டுள்ள வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளராகவும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முக்கிய பிரதிநிதியாகவும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment