மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவுப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டியனாறு பகுதியில் வைத்து ஒருவர் காட்டு யானையின் தாக்குதலுக்கிலக்காகி உயிரிழந்துள்ளதாக வவுணதீவு பொலிசார் தெவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் அறியவருவதாவது…….
நேற்று வியாழக்கிழமை (27) இரவு கண்டியனாறு பகுதிக்கு தமது கால் நடைகளைப் பார்க்கச் சென்றவரே இவ்வாறு காட்டு யானையின் தாக்குதலுக்கிலக்காகி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் வவுணதீவுப் பிரதேசத்தின் கொல்லநுலைக் கிராமத்தைச் சேர்ந்த 6 பிள்ளைகளின் தந்தையான 55 வயதுடைய பாலிப்போடி-இராசதுரை என அடையாளம் காணப்படடுள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியாசலையில் வைக்கப் பட்டுள்ளது.
இச்சம்வம் தொடர்பில் வவணதீவுப் பொலிசார் மேலதிக் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments:
Post a Comment