மட்டக்களப்பு புதூர் கிராமத்தில் மிகவும் வறுமை நிலையில் ஓலைக் குடிசையில் வசித்து வந்த க.மோகன் என்பவரின் குடும்பம்பத்திற்காக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினால் கட்டப்பட்ட வீடு கையளிக்கும் நிழ்வு இன்று திங்கட் கிழமை (24) நடைபெற்றது.
இக்குறித்த குடும்பம் மிகவும் வறுமையில் வீடற்ற நிலையிலும் வாழ்ந்து வருவது தொடர்பாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சி.சந்திரகாந்தனின் கவனத்திற்கு கட்சித் தொண்டர்கள் கொண்டு வந்ததையடுத்து மேற்படி கட்சி நிதியிலிருந்து 57,5000 ரூபாய் செலவில் இவ்வீடு கட்டிக் கொடுக்கப் பட்டதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தான் கூறினார்.
இந் நிகழ்வில் கலந்து கொண்ட கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் குறிப்பிடுகையில்……
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் தமது கட்சி நிதியில் இருந்து கட்டிக்கொடுத்த முதலாவது வீடு இதுவாகும். செய்றிட்டங்கள் ஊடாக இதுபோல் பல வீடுகள்இ மலசலகூடங்கள், பாதைகள், பாடசாலைகள், பாலங்கள் என பல கோடிக்கணக்கான ரூபாய்கள் தமிழ் மக்கள் வீடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிழக்கு மாகாண முதலமைச்சராக இருந்த காலத்தில் செய்துள்ளோம் அச்செயற்பாடுகள் தற்போதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் அப்போதேல்லாம் நாம் அடைந்த திருப்தியை விட நாம் இப்போது மட்டற்ற திருப்தி கொள்கிறோம்.
இது எந்த அரச நிதியிலேயோ அல்லது வெளிநாட்டு உதவியாளர்களின் நிதியிலேயோ அமைக்கப்படாமல் எமது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உறுப்பினர்களினால் மாதாமாதம் சேர்க்கப்படும் சந்தாப் பணத்திலிருந்தே இவ்வீடு அமைக்கப்பட்டுள்ளது.
எமது கட்சி பாரிய நிதி வளத்தினைக் கொண்டுள்ள கட்சியல்ல வைத்தியர்கள் பொறியலாளர்கள், மீனவர்கள், கூலித்தொழிலாளிகள், மேசன் என பல தொழில்களில் ஈடுபடும் எமது கட்சியின் உறுப்பினர்கள் மாதா மாதம் தாம் உழைக்கும் சம்பளத்தில் இருந்து 10வீதத்தினை கட்சியின் வளர்ச்சிக்காக சந்தாப்பணமாக செலுத்துவார்கள்.
இவ்வாறு வியர்வை சிந்தி உழைத்த கட்சியின் சந்தாப்பணத்தில் இருந்து கட்சியின் தலைவர் சி.சந்திரகாந்தன் அவர்களின் சிந்தனையில் சுமார் 5இ75000ரூபா பெறுமதி செலவில் முதலாவது வீடு கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.
இதனால் எமக்கு பெரும் மகிழ்ச்சி இது போன்று இத்திட்டம் தொடரும் என அவர் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் முன்னாள் கிழக்குமாகாணச
பை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளரும் ஆகிய பூ.பிரசாந்தன் மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் ஜோர்ஜ்பிள்ளை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மகளிர் அணித் தலைவி திருமதி. செல்வி மனோகர் மற்றும் திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கிராம உத்தியோகஸ்தர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment