மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேசமட்ட இலக்கிய விழா வெள்ளிக்கிழமை (14) காலை போரதிவுப் பற்று பிரதே செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் ந.வில்வரெத்தினம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், கல்வி அதிகாரிகள் பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் பலர்ந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வின்போது 2013, மற்றும் 2014 அகிய இரு ஆண்டுகளிலும், போரதிவுப்பற்று பிரதேச செயலகத்தின் கலாசாரப் பிரிவினால் நடாத்தப்பட்ட கவிதை எழுதுதல், கவிதை பாடல், கையெழுத்துப்போட்டி, கட்டுரை, பாடல்ஆக்கம், நாட்டார் கலை ஆற்றல், விவரணம், சிறுகதை, சிறுவர் கதை எழுதுதல் போன்ற பல போட்டிகளில் முதலாம், இரண்டாம் மூன்றாம், இடங்களைப் பெற்ற பாடசாலை மாணவர்கள் உட்பட 45 பேருக்கு பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப் பட்டதாக, போரதிவுப் பற்று பிரதேச கலாசார அபிவிருத்தி உத்தியோகஸ்தர் திருமதி பக்தகௌரி மயூரவரதனன் தெரிவித்தார்
.
0 Comments:
Post a Comment