ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரான மைத்திரிபால சிறிசேன
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட
அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நிலைமைகளை
ஆராய்ந்தே முடிவெடுக்கும் என்று அதன் தலைவரான இரா. சம்பந்தன்
தெரிவித்துள்ளார்.
மைத்திரிபால சிறிசேன பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டதையும்,
தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அவரது செவ்வியையும் தான் கேட்டதாகக் கூறிய
சம்பந்தன், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பதாக அவர் கூறிய
சில அம்சங்களை வரவேற்ற போதிலும் அவை குறித்தும், யாருக்கு ஆதரவு வழங்குவது
என்பது குறித்தும் தமது கட்சியே ஆராய்ந்து முடிவெடுக்கும் என்றும்
கூறியுள்ளார்
அதேவேளை மைத்திரிபால சிறிசேனவை தனக்கு நன்கு தெரியும் எனவும் அவர்
நிதானமாக, விசுவாசமாக செயல்படக் கூடியவர் என தான் கருதுவதாகவும் இரா.
சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment