25 Nov 2014

அன்னமலை நீர்ப்பாசன திணைக்களத்தினால் விவசாயிகளின் நலன்கருதி உரக்களஞ்சியம் திறந்துவைப்பு

SHARE

(சா.நடனசபேசன்)
நாவிதன்வெளிப் பிரதேசசெயலகப்பிரிவில் அன்னமலை நீர்பாசனத்திணைக்களத்தின் பொறியியலாளர் பகுதியில் கல்லோய நவோதயத்திட்டத்தின் கீழ் விவாயிகளின் நலன் கருதி புதிதாக உரக்களஞ்சியசாலை வேப்பையடியில் அமைக்கப்பட்டு திறத்து வைக்கும் நிகழ்வு 25 திகதி செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு விவசாய அமைப்பின் தலைவர் முத்துவேல்.தவராசா தலைமையில் இடம்பெற்றதுடன் விவசாயிகளுக்கான உரமானியமும் வழங்கப்பட்டது

அன்னமலை நீர்ப்பாசனத்திணைக்களத்தின் கீழ் சுமார் 8500 ஏக்கர் வேளான்மை செய்கைபண்ணப்பட்டு வருவதுடன் இந்த விவசாயிகளுக்கு மஹிந்த சிந்தனை மூலம் வழங்கப்பட்டு வரும் உரத்தை களஞ்சியப்படுத்த இடமில்லாத நிலையில் விவசாயிகள் அலைந்த நிலையில் 25 இலட்சம் செலவில் இக் களஞ்சியசாலை அமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டதுடன் விவசாயிகளுக்கு உரமானியமு அன்றைய தினம் வழங்கப்பட்டது.
இந்தவைபவத்தில் அன்னமலை நீர்ப்பாசனத்திணைக்களத்தின் பொறியியலாளர் எச்.கே.பி.ஜி.ஹேரத் கிராமசேவகர்களான அலைக்சாண்டர்,உதயகுமார் மற்றும் விவாசாய அமைப்புக்கள் பொதுஅமைப்புக்கள்  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்






SHARE

Author: verified_user

0 Comments: