17 Nov 2014

தேனூர் ஊற்று கையெழுத்து சஞ்சிகை வெளியீட்டு விழா

SHARE
“தேனூர் ஊற்று” எனும்  கையெழுத்து சஞ்சிகை வெளியீட்டு விழா இன்று திங்கட் கிழமை (17) மாலை மட்டக்களப்பு மாவட்டம் தேற்றாத்தீவு பொது நூலகத்தின் வாசகர் வட்டத்தினால் தேற்றாத்தீவு பொதுக் கட்டிடத்தில் வைத்து வெளியீட்டு வைக்கப் பட்டது.

வாசகர் வட்டத் தலைவர் ப.தீபன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்ப பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கா.சித்திரவேல், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் மூ.கோபாலரெத்தினம், உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

“தேனூர் ஊற்று”  எனும் கையெழுத்து சஞ்சிகையில் தேற்றாத்தீவு கிராமத்தைச் சேர்ந்த பலர் கவிதை , கட்டுரை கிராமத்தின் வரலாறு, மத ஸ்தலங்களின் வரலாறு என பல ஆக்கங்களை அவர்களது சொந்தக் கையெழுத்தில் எழுதியுள்ளனர்.

இவ்வாக்கங்கள் அனைத்தினையும் தொகுத்து தேற்றாத்தீவு பொது நூலகத்தின் வாசகர் வட்டத்தினால் இன்று வெளியீட்டு வைக்கப் பட்டுள்ளது.

இந்நுலின் நயவுரையினை மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்வி அலுவலகத்தின் தமிழ் பாடத்திற்குப் பெறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர் க.குணசேகரம் நிகழ்த்தினார்.

நூலின் முதற் பிரதியினை வாசகர் வட்டத் தலைவர் ப.தீபனிடமிருந்து மட்டக்களப்பு பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கா.சித்திரவேல் பெற்றுக் கொண்டார்.

இந்நிகழ்வின்போது கருத்து தெரிவித்த மட்டக்களப்பு பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கா.சித்திரவேல்…..

தேசிய வாசிப்பு மாதம் என்பது கடந்த 2004 ஆண்டு தொடக்கம் இருந்து தேசிய நூலக ஆவணமாக்கல் சேவையினரால் நாடுப+ராகவும் செயற்படுத்தப்பட்டு வரப்படுகின்றது. அந்த வகையில் 10 வது ஆண்டு  தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகளை இவ்வருடம் கடந்த ஒக்டோபர் மாத்தில் உள்ளுராட்சி மன்றங்களின் கீழுள்ள நூலகங்களில் நாம் நடாத்தியிருந்தோம்.

வாசிப்பினுடைய மகிமைகளையும், வாசிப்பினை மக்கள் மத்தியில் விஸ்த்தரிப்பதற்காகவும்தான் வருடாந்தம் நூலகங்களில் பல நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பல நூலகங்கள் அமைந்துள்ளன ஆனால் இந்த தேற்றாத்தீவு நூலக வாசகர் வட்டத்தினால்தான் இன்று ஒரு கையெழுத்து சஞ்சிகை வெளியிடப் பட்டுள்ளமை வரவேற்கத் தக்கதாகும்.



















SHARE

Author: verified_user

0 Comments: