மட்டக்களப்பு மாவட்டத்தில் எல்லை கிராமமான ரிதிதென்ன கிராமத்திற்கு
விஜயமொன்றை மேற்கொண்ட மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின்
தலைவரும், பொருளாதார அபிவிருத்தி பிரதிமைச்சருமான
எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நேற்று சனிக்கிழமை இலங்கை போக்குவரத்து சபையின்
ரிதிதென்ன பஸ் டிப்போவுக்கு விஜயமொன்றை மேற்கொண்டார்.
இலங்கை போக்குவரத்து சபையின் ரிதிதென்ன பஸ் டிப்போ முகாமையாளர் உள்ளிட்ட
அதன் அதிகாரிகள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்விடம் விடுத்த
வேண்டுகோளுக்கினங்க அங்கு விஜயமொன்றை மேற்கொண்டு, குறித்த டிப்போவின்
குறைகளை கேட்டறிந்து கொண்டார்.
இதன்போது ரிதிதென்ன பஸ் டிப்போ முகாமையாளர் ஏ.எம்.ஜவ்பர் பிரதியமைச்சரிடம்
டிப்போவில் நீர் தட்டுப்பாடு இருப்பதாகவும் தெரிவித்தார். இதனை
கருத்திகொண்ட பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ், குறித்த டிப்போவில் அவசரமாக
கிணறொன்றை நிர்மாணிப்பதற்கு அவரின் ரிதிதென்ன பிரதேச இணைப்பாளர்
எம்.எச்.எம்.தாஹிருக்கு உத்தரவிட்டார்.
இவ் விஜயத்தில் ஸ்ரீலங்கா ஹிறா பவுன்டேஷன் நிறுவனத்தின் செயலாளர் நாயகம்
அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.மும்தாஸ் (மதனி), பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின்
இணைப்பாளர் எம்.ஐ.நாஸர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment