28 Nov 2014

நீர் வழங்கலின் தேவைப்பாடுகள் தொடர்பில் விளக்கமளிக்கும் செயலமர்வு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் கேட்போர்கூடத்தில்

SHARE
தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் ஏற்பாட்டில்,  நீர் வழங்கலின் தேவைப்பாடுகள் தொடர்பில் விளக்கமளிக்கும் செயலமர்வு  மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் கேட்போர்கூடத்தில் வியாழக்கிழமை (27) நடைபெற்றது.

அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், உள்ளூராட்சி நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்காக நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் மட்டக்களப்பு அலுவலகத்தினால் இந்தச் செயலமர்வு நடத்தப்பட்டது.

இதில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், ஏறாவூர் நகரசபைத்; தவிசாளர் அலிசாகிர் மௌலானா, மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன், திணைக்களத்; தலைவர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது சுத்தமான குடிநீரின் முக்கியத்துவம், தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையால் மேற்கொள்ளப்பட்டுவரும் குழாய் குடிநீர் வழங்கலின் தன்மைகள், அதற்கான தேவைகள், செலவு, வருடாந்த செலவு மீதப்படுத்தல், நீர்ப்பாதுகாப்புத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டன.

தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் மட்டக்களப்பு பிரிவு முகாமையாளர், பொறியியலாளர் கே.பி.விநோதன், அம்பாறையைச் சேர்ந்த  பிரதம பொறியியலாளர் ஆதம்வாவா, பொறியியலாளர் எம்.எல்.எம்.ஹலால்தீன், கல்லாறு நீர்வழங்கல் பிரிவு நிலைய பொறுப்பதிகாரி எஸ்.அருளம்பலம் உள்ளிட்டோர் விளக்கமளித்தனர்.

தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் மட்டக்களப்பு பிரிவு முகாமையாளர் பொறியியலாளர் கே.பி.விநோதன் தெரிவிக்கையில்,
'சமூர்த்தி பயனாளிகள் குடிநீர் விநியோகத்தை குறைந்த செலவில் பெற்றுக்கொள்ள முடியும். பாடசாலைகளுக்கு இணைப்புச் செலவு மாத்திரமே அறவிடப்படும். மாதாந்தக் கொடுப்பனவு திறைசேர்மூலம் செலுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறான விடயங்கள் தெரியாமையினால் பாடசாலைகள் இணைப்புகளை பெற்றுக்கொள்ளத் தயங்குகின்றன.

தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் குடிநீர் விநியோகத்தை பெற்றுக்கொள்பவர்கள் தங்களது குடிநீருக்காக மாத்திரம் மிகவும் சிக்கனமாகப்  பயன்படுத்துகின்றனர். ஆனால், எமது நீர்விநியோகத்தை முழுமையாகப் பாவிப்பதனால், மாதாந்த மின்சாரக்கட்டணம் ஒரு குறிப்பிட்ட அளவில் குறைக்கமுடியும்.

குடிநீர்ப்பாவனை, எமது கட்டணம், பெற்றுக்கொள்ளும் வழிமுறைகள் பாவனை தொடர்பில் சரியான விளக்கமில்லாமையினாலேயே பலர் பாவனையைக் குறைத்துக்கொள்வதும், இணைப்புக்களை பெற்றுக்கொள்ளாமலும் இருக்கின்றனர்' எனக் கூறினார்.(tm)
SHARE

Author: verified_user

0 Comments: