(சுந்தர்)
தேசிய நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் உதவியின் கீழ் மட்டக்களப்பு கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட 10 சிறுவர் கழகங்களின் உறுப்பினர்கள் மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குச் சென்று அங்குள்ள உதயநிலா சிறுவர் கழகத்து இடப்பகிர்வு சுற்றுலா ஒன்றை மேற்கொண்டிருந்தனர்
இதன்போது உதயநிலாசிறுவர் கழக உறுப்பினர்களால் மேற்படி சிறுவர் கழக உறுப்பினர்கள் மலர்சென்டு வழங்கி வரவேற்றதோடு இரு சிறுவர் கழக உறுப்பினர்களாலும் கலைநிகழ்சிகள் நடாத்தப்பட்டதோடு தங்களது சிறுவர் கழகங்களின் செயற்பாடுகள் பற்றியும் கலந்துரையாடினர்.
சிறுவர் உரிமை மேம்பாட்டு உதவியாளர் ஏ.ஆர்.எம். றுசைட் தலைமையில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த இந்நிகழ்வில் சிறுவர் உரிமைமேம்பாட்டு உத்தியோகத்தர்களுக்கான மாவட்ட இணைப்பாளர் ஏ.குகதாஸன்; சிறுவர்களுடைய பங்களிப்பு, சிறுவர்கள் பாதுகாப்பு தொடர்பான கட்டமைப்பு மற்றும் சிறுவர் கழக செயற்பாடுகள் பற்றி தெளிவுபடுத்தினார்.
இதனைத்; தொடர்ந்து வாழைச்சேனை காகிதஆலைக்கு சிறுவர்கள் அழைத்துச செல்லப்பட்டனர். இன்நிகழ்வில் 120 சிறுவர்கழக அங்கத்தவர்கள், கோறளைப் பற்றுபிரதேச செயலக சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் யு.அழகுராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தேசிய நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் அனுசரணையின் கீழ் மட்டக்களப்பு கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் சிறுவர்களுடைய பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி என்பவற்றை மேம்படுத்தும் வகையில் சிறுவர் கழகங்களுக்கான பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத் தக்கதாகும்.

0 Comments:
Post a Comment