மட்டக்களப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட மயிலம்பாவெளி விபுலானந்தா வித்தியாலத்திற்கு நியமிக்கப்பட்ட காவலாளியை பாடசாலைக்கு உள்நுழைய விடாது கிராமத்தவர்கள் தடுத்து போராட்டம் நடத்திய சம்பவம் இன்று புதன்கிழமை (19) இடம்பெற்றுள்ளது.
கிழக்க மாகாணசபையினால் நேற்று செவ்வாய்க்கிழமை (18) வழங்கப்பட்ட நியமனத்தில் கீழ் ஏறாவூர் பிரதேசத்தினை சேர்ந்த ஒருவருக்கு மயிலம்பாவெளி விபுலானந்தா வித்தியாலத்திற்கு நியமனம் வழங்கப்பட்டதை கண்டித்தும் தமது பிரதேசத்தினை சேர்ந்தவரை நியமிக்குமாறும் வலியுறுத்தியே கடமைக்கு வந்தவர் தடுக்கப்பட்டதாக கிராமத்தவர்கள் தெரிவித்தனர்.
மயிலம்பாவெளி விபுலானந்தா வித்தியாலத்தின் பழைய மாணவர் சங்கம், கிராம அபிவிருத்தி சங்கம், பாடசாலை அபிவிருத்தி சங்கம் இணைந்து இந்த போராட்டத்தினை நடத்தியது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த போராட்டத்தில் ஈடுபட்டோர்,
தமது பாடசாலைக்கு காவலாளி மற்றும் பாடசாலை சிற்றூழியர்களை நியமிக்குமாறும் அதற்காக இருவரின் பெயரை அதிபர் ஊடாக பரிந்துரை செய்யப்பட்டு கடந்த காலத்தில் கிழக்கு மாகாணசபைக்கு அனுப்பிவைத்திருந்தோம்.
அது தொடர்பில் எதுவித பதிலும் இதுவரையில் எமக’கு வழங்கப்படாத நிலையில் ஏறாவூரை சேர்ந்த முஸ்லிம் நபர் ஒருவரை எமது பாடசாலைக்கு காவலாளியாக நியமித்துள்ளனர்.
எமது பாடசாலைக்கு எமது பகுதியை சேர்ந்த ஒருவரையே காவலாளியாக நியமிக்க வேண்டும். அதுவரையில் இவ்வாறான நியமனங்கள் பெற்றுவருவோரை பாடசாலைக்குள் செல்ல அனுமதிக்க மாட்டோம் எனத் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment