இந்நியமனம் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் பீ.பி அபயகோனினால் வழங்கப்பட்டுள்ளது.
புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் மேலதிக
செயலாளராக அஷ்-ஷெய்க் எம்.ஐ.அமீர் தற்போது கடமையாற்றுகின்ற நிலையிலேயே இவர்
இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்;.
இதற்கமைவாக எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி திங்கட்கிழமை இவர் தனது
கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரான அஷ்-ஷெய்க் எம்.ஐ.அமீருக்கான செயலகம் நிந்தவூர் பிரதேச செயலகத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் கரையோர மாவட்டக் கோரிக்கை
முன்வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த அதிரடி நியமனம் அரசாங்கத்தினால்
மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரியான அமீர்;, பேருவளை ஜாமிய்யா நளீமிய்யா கலாபீடத்தின் பழைய மாணவராவார்
சம்மாந்துறை, கல்முனை பிரசே செயலாளராகவும், முஸ்லிம் சமய கலாசார
திணைக்களத்தின் பணிப்பாளராகவும், புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சின்
உதவிச் செயலாளராகவும் இவர் கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment