இலங்கையில் தனிப் பெரும் தமிழ் தொகுதியான பட்டிருப்புத் தொகுயின் பல
இடங்களிலும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு என்றும் இல்லாதாவாறு பெரும்
பதாததைகளும் சோடனைகளும், இடம் பெற்று வருகின்றன.
அந்த வகையில், களுவாஞ்சிகுடி, பட்டிருப்பு, களுதாவளை. பெரியபோரதீவு, வெல்லாவெளி பொன் கோட்டைக் கல்லாறு, போன் இடங்களில் ஜனாதியின் பதாகைகள் ஒட்டப்பட்டும், பெரியபோரதீவு, வெல்லாவெளி , மற்றும் களுவாஞ்சிகுடி ஆகிய இடங்களில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கிளைக் காரியாலயங்களும் அமைக்கப் பட்டுள்ளன.
எந்தவொரு ஜனாதிபதி தேர்தலுக்கும் இல்லாத வகையில் இவ்வாறான ஏற்பாடுகள் முன் கூட்டியே இடம் பெற்று வருகின்றன. இருந்தும் பட்டிருப்பு கல்வி வலயத்திற்கு உட்பட்ட சிலபாடசாலைகளில் அமைக்கப்பட்டுள்ள மகிந்தோதய கட்டிடங்களை திறப்பதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேரில்வர இருப்பதாகவும் அறிய முடிகின்றது.
இருந்தபோதும் இம்முறை இடம் பெறவிருக்கும் ஐனாதிபதித் தேர்தலில் பட்டிருப்புத் தொகுதி முக்கிய இடத்தினை பெற்று ஐனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு அதிகூடிய வாக்குகளை பெற்றுக் கொடுப்பதற்காக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதி அமைப்பாளரான சாணக்கியன் இராசமாணிக்கம் மிகவும் மும்முரமாகச் செயற்பட்டுக் கொண்டி இருப்பதனையும் அவதானிக்க முடிகின்றது.
இதனிடையே 1994 ஆம் ஆண்டு இடம் பெற்ற ஐனாதிபதி தேர்தலிலே சந்திரிக்கா குமாரதுங்காவுக்கு அதிகூடிய 96 வீதமான வாக்குகளை வழங்கி இலங்கையிலே காணப்படும் தேர்தல் தொகுதிகளில் பட்டிருப்புத் தொகுதி மக்களே அளித்திருந்தனர்.
அதன் பின்னர் ரணில் விக்கிரம சிங்கவுக்கு இத்தொகுதி மக்கள் அதிகளவு வாக்குகளை அளித்திருந்தனர் இதனால் பட்டிருப்புத் தேர்தல்; தொகுதியில் தற்போது களம் இறங்கியுள்ள பொது வேட்பாளரின் கவனமும் இத் தொகுதியின் பால் ஈர்க்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் மக்களிடம் காணப்படுகின்றது.
எது எவ்வாறாக இருந்தபோதிலும் அனைத்தையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்…
0 Comments:
Post a Comment