தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் எமது நாட்டில் வாழுகின்ற இளைஞர்களின் திறமைகளை வெளிக்கொணர்வதற்காக களம் அமைத்துக் கொடுக்கின்றது. அந்த வகையில் இளைஞர்களின் கலை, கலாச்சார, திறன்களை மாவட்ட மட்டத்தில் அடையாளம் கண்டு அதனை தேசியரீதியில் வெளிக்கொணர்வதற்காக வருடாந்தம் இளைஞர் விருது போட்டிகளை நடாத்திவருகின்றது.
இளைஞர்கள் தங்களது திறமைகளை இனங்கண்டு அவற்றை வளர்த்துக் கொள்வதற்கும் அதனை உலகிற்கு வெளிப்படுத்துவதற்கும் இவ்வாறான சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
என தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.எல்.எம்.என்.நைறூஸ் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால்; நடாத்தப்பட்டு வரும், தேசிய இளைஞர் விருதுப் போட்டி சனிக் கழமை மட்டக்ளப்ப தேவநாயகம் மண்டபத்தல் நடைபெற்றது. இந்நகழ்வில் கவந்து கொண்டு உரையாற்றுகையலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது விடையமாக அவர் மேலும் கூறுகையில்……
மட்டக்களப்பு மாவட்டத்தில் கிராமப் புறங்களில் பல்வேறு திறமைகளை தன்னகத்தே கொண்டு இலைமறை காய்களாக பல இளைஞர், யுவதிகள் வாழ்ந்து வருகின்றார்கள்.
அவர்கள் தங்களை இளைஞர் கழகங்களில் இணைத்துக் கொண்டு தங்களின் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். எமது நாட்டின் பல தலைசிறந்த கலைஞர்கள் கிராமங்களில் இருந்து தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினூடாக இவ்வுலகிற்கு அறிமுகமானவர்கள் என்பதனை கூறிக்கொள்வதில் பெருமிதம் அடைகின்றேன்.
தற்போதைய இளைஞர் சமூகம் பாடசாலைக் கல்வியில் மட்டுமே அதிகம் கவனம் செலுத்துவதுடன், ஏனைய துறைகளில் கவனம் செலுத்துவது மிகவும் குறைவாகவே கானப்படுகின்றது. அவ்வாறல்லாமல் விளையாட்டு, கலை, கலாசாரம் போன்ற துறைகளிலும் தங்களது திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதற்கான சந்தர்பங்களை ஆசிரியர்களும் பெற்றோர்களும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
கடந்த மூன்று தசாப்தங்களாக எமது நாட்டை ஆட்கொண்டிருந் தயுத்தம் காரனமாக அன்றைய இளைஞர், யுவதிகள் தங்களது திறமைகளை வளர்த்துக் கொள்ளவும் இவ் உலகிற்கு எடுத்துக் காட்டவும் முடியாத துர்ப்பாக்கிய நிலையில் இருந்தனர். ஆனால் தற்போதைய நிலமை அவ்வாறல்ல. ஜனாதிபதியினால் இளைஞர் யுவதிகள் சமாதான சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
தற்கால இளைஞர் யுவதிகளின், திறமைகளை சுதந்திரமாக வெளிப்படுத்தும் பாக்கியத்தை அவர்கள் பெற்றுள்ளார்கள். எனவே அனைத்துத் துறைகளிலும் ஆற்றல் மிக்க சிறந்த எதிர்கால தலைவர்களாக உருவாக முயற்சிக்கவேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment