நீண்ட காலமாக கல்முனை கரையோர பிரதேசங்களில் கடல் மீனுக்கு மிகவும்
தட்டுப்பாடு நிலவியது. அத்துடன் மீன்பிடியை தங்களது ஜீவனோபாயமாக கொண்ட
மக்கள் தங்களது வாழ்க்கையைக் கொண்டு செல்ல மிகவும் கஷ்டமான நிலையில்
இருந்தனர்.
கடந்த இரண்டு வாரங்களாக அம்பாறை மாவட்டத்தின் கரையோர பகுதிகளில் பாரிய
அளவிலான மீன்கள் கரைவலை மீனவர்களுக்களுக்கு பிடிபடுகின்றது. இதில்
அறுக்குளா, பாரை, பாரைக்குட்டி, சூரை, சூடை,சாளை மற்றும் காரல் போன்ற
மீன்கள் பிடிபடுவதாக மீனவர்கள் கூறுகின்றனர். இதுவரை ஒரு கோடி ரூபா தாண்டிய
விலைக்கும் மீன்கள் பிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
0 Comments:
Post a Comment