கிழக்கு இந்து ஊடகவியலாளர் ஒன்றியத்தின் மாதாந்த ஒன்று கூடல் இன்று சனிக்கிழமை (22) அம்பாறை மாவட்டத்தின் காரைதீவு பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
கிழக்கு இந்து ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் சிரேஸ்ட்ட ஊடகவியலாளர் வி.ரி.சகாதேவரஜா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கிழக்கு மாகாணத்திலுள்ள பெரும்பாலான இந்து ஊடகவியலாளர் கலந்து கொண்டிருதனர்.
அண்மையில் கெஸ்லந்தையில் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களை கிழக்கு இந்து ஊடகவியலாளர்கள் நேரில் சென்று பார்வையிட்டு நிவாரணப் பொருட்களையும் வழங்கியிருந்தனர். அவை தொடர்பான அனுபவ பகிர்வு,
எதிர் வரும் டிசம்பர் மாதம் ஊடகவியலாளர்களுக்கு ஒருநாள் பயிற்சி செயலமர்வு நடாத்துதல்,
ஜனவரியில் கோமாதா பூஜை செய்தல்,
பெப்ரவரியில் வெளிக்கள சுற்று பயணம் மேற்கொள்ளல்,
ஏப்ரலில் கிழக்கு இந்து ஊடகவியலாளர் ஒன்றியத்தின் பொதுச்சபையினைக் கூட்டி புதிய நிருவாகத்தினை தெரிவு செய்தல் போன் பல தீர்மானஙகள் இதன்போது எடுக்கப்பட்டன.
இக்கூட்டத்தின்போது காரைதீவு மனித அபிவிருத்தி ஸ்தாபனத்தின் இணைப்பாளர் எஸ்.ஸ்ரீகாந், காரைதீவைச் சேர்ந்த சமூகசேவையாளர் ப.சிறில் ஆகியோர் மேற்கொண்டு வரும் சமூக சேவைகளைப் பாராட்டி கிழக்கு இந்து ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப் பட்டமை குறிப்பிடத் தக்கதாகும்.

0 Comments:
Post a Comment