பொருளாதார அபிவிருத்தி அமைச்சால், அரசாங்க ஊழியர்களுக்கு வழங்கப்படுகின்ற
மோட்டார் சைக்கிள் திட்டத்தை, அம்பாறை மாவட்ட அரசாங்க ஊழியர்களுக்கும்
வழங்குவதற்கான நடவடிக்கையை துரிதப்படுத்துமாறு உள்ளூராட்சி மாகாண சபைகள்
அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில்
ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
திவிநெகும திணைக்களம், சுகாதாரத் திணைக்களம், விவசாயத் திணைக்களம் ஆகிய
திணைக்களங்களில் வெளிக்கள உத்தியோகஸ்தர்களாகக் கடமையாற்றுவோருக்கு நாடளாவிய
ரீதியில் மோட்டார் சைக்கிள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஏனைய மாவட்டங்களில் மோட்டார் சைக்கிள் வழங்கப்பட்டு வருகின்ற போதும்,
அம்பாறை மாவட்ட வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படவில்லை எனவும் இதனை
துரிதமாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரப்பட்டுள்ளது.
மேலும் திவிநெகும உத்தியோகஸ்தர்கள் மற்றும் விவசாய உதவி ஆரர்ய்ச்சி
உத்தியோகஸ்தர்கள் சங்கம், இக்கோரிக்கையை அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லாவிடம்
முன்வைத்துள்ளதாக, அம்பாறை மாவட்டத் தலைவர் ஐ.எச்.ஏ. வகாப் வெள்ளிக்கிழமை
(28) தெரிவித்தார்.
இக்கோரிக்கைக்கு அமையவே அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா இதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளார்.
0 Comments:
Post a Comment