21 Nov 2014

அமைச்சர் ராஜித சேனாரத்தின அமைச்சுப் பதவியிலிருந்து ராஜினாமா!

SHARE
அமைச்சர் ராஜித சேனாரத்தின தனது அமைச்சுப் பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.
மீன்பிடி நீரியல் வளத்துறை அமைச்சுப் பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.
அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, சுசில் பிரேம்ஜயந்த், கெஹலிய ரம்புக்வெல்ல ஆகியோரும் இன்று காலை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுடன் தொலைபேசி மூலம் உரையாடியுள்ளனர்.
இவர்களில் கெஹலிய தவிர ஏனைய இருவரும் எதிர்வரும் இரண்டொரு நாட்களுக்குள் கட்சி தாவ சம்மதம் தெரிவித்துள்ளனர். 
இவர்களோடு மேலும் பல அமைச்சர்களும் அரசாங்கத்தை விட்டு வெளியேறக் காத்திருப்பதாக கூறப்படுகின்றது
SHARE

Author: verified_user

0 Comments: