ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைமைச் செயலாளர் மைத்திரிபால
சிறிசேன, சரத் பொன்சேகாவைப் போல் விழுந்து நொருங்கப் போகின்றார் என்று
அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர் என, கிழக்கு மாகாண சபையின்
உறுப்பினரும் முன்னாள் முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன்
தெரிவித்தார்.
பொருளாதார அபிவிருத்தியமைச்சின் வாழ்வின் எழுச்;;சி நிவாரணம் பெறுபவர்களுக்கு, செழிப்பான இல்லம் திட்டத்தின்கீழ் வீடுகளைத் திருத்துவதற்கான பணக் கொடுப்பனவுகள் வழங்கும் நிகழ்வு, இருதயபுரம் இருதயநாதர் மண்டபத்தில் சனிக்கிழமை (29) நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
1968 இல் டட்லி – தந்தை செல்வா ஒப்பந்தத்தில், அதிகாரம் பிராந்திய முறையிலிருந்து மாவட்ட முறைக்கு வந்தது. இறுதியில் எதுவும் இல்லாமல் போய்விட்டது.
பின்பு அரசியலில் நரியாக இருந்த ஜே.ஆர். ஜெயவர்த்தன, 2ஃ3 பலத்தோடு இருந்தும் இந்திய அரசுடன் செய்து கொண்ட 13ஆவது ஒப்பந்தத்தின் படி, மாகாண சபைக்கான அதிகாரங்களை வடக்கு, கிழக்கு மாகாண சபைக்கு வழங்கவில்லை.
அதற்காக மஹிந்த ராஜபக்ஷ எமக்கு அள்ளிக் கொட்டிவிட்டார் என்று கூறவில்லை, மாகாணங்களுக்கு அதிகாரங்களை ஓரளவுக்கேனும் வழங்கி இருந்தார். எடுத்த எடுப்பில் எல்லாவற்றையும் பெற முடியாது பதிலாக படிப்படியாகத்தான் நாம் எமது உரிமைகளை வென்றெடுக்க வேண்டும்.
2009ஆம் ஆண்டின் பின்னர் நாட்டில் அமைதி நிலவுகின்றது. இராணுவம், பொலிஸ் பரிசோதனை என்றில்லாமல் யார் எந்த இடத்துக்கும் என்நேரமும் செல்லலாம். இந்நிலையை நாம் பாதுகாக்க வேண்டும். தமிழர்களாகிய எமக்கு சந்தர்ப்பம் தரப்பட்டுள்ளது நாம் படிப்படியாக முன்னேறுவோம்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு, குழுக்களுடன் பேசுதல், கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுலாக்கல் என்று பல்வேறு பிரச்சினைகளைப் பேசுகின்றார்கள். அவர்கள் பெரிய தேசியப் பிரச்சினைகளைக் கண்டு கொள்வதில்லை.
அதை விடுத்து எல்லாம் கொள்ளை, குடும்ப ஆட்சி என்று ஒட்டு மொத்த பொய்களைக் வாய் கூசாமல் கூறாமல், நல்ல விடயங்களை நல்லது என்றே கூற வேண்டும்.
மட்டக்களப்புக்;கு நிறைய அபிவிருத்தி வந்துள்ளது. இவைகள் அபிவிருத்தி இல்லையா அதை விடுத்து பொய்யான பிரசாரங்களை நம்பி ஏமாறாமல் உளரீதியாக ஏற்று சிறந்த சிந்தனை மாற்றத்தோடு செயற்படுங்கள்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைச் செயலாளராக இருந்து ஆட்சி புரிந்து வந்த மைத்திரிபால சிறிசேன, பொன்சேகா போல் விழுந்து நொருங்கப் போகின்றார் என்று அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
2010ஆம் ஆண்டு இதே மாதிரியான ஒரு சூழல் வந்தது. மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக, சரத் பொன்சேகா இதோ வருகின்றார் மாற்றத்துக்காக வருகின்றார். ஆறு மாதத்துக்குள் ஜனாதிபதி முறையை ஒழிப்பேன் என்றாh.; மஹிந்த ராஜபக்ஷ தோற்கப்போகின்றார் என்று கூறினார்கள்.
பாவம் சரத் பொன்சேகா சிறைச்சாலைக்கு சென்றார். சரத் பொன்சேகா ஒரே அடியாக வீழ்ந்து விட்டார். அந்த தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெற்றியீட்டினார்.
அதே போன்று இன்னும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பதவிக்காலம் இரண்டு வருடங்கள் இருந்தாலும் மூன்றாவது தடவையாகவும் அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியும் என்பதால் அவர் போட்டியிடுகின்றார்.
தேர்தல் அறிவித்தவுடனேயே மஹிந்த ராஜபக்ஷ போட்டியிட முடியாது சட்டப்பிரச்சினை உள்ளது என்றார்கள்.
இதோ வருகின்றார் பொன்சேகா என்று அன்று கூறியது போல இதோ வருகின்றார் எமது பக்கத்து மாவட்டத்திலுள்ள மைத்திரிபால சிறிசேன என்கின்றனர்.
பொன் சேகா போன்று மைத்திரிபால சிறிசேனவும் வீழ்ந்து நொறுங்கப் போகின்றார். என ஆய்வாளர்களும் அரசியல் ஞானிகளும் கூறுகின்றனர். பாவம் மைத்திரிபால எனவும் அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அவர் 100 நாட்களில் நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழித்தல் போன்ற பல்வேறு நடைமுறைக்கப் பொருந்தாத பொய்யான பிரசாரங்களை பேசி வருகின்றார்.
இவற்றை நம்பாமல் எமக்குள்ள பிரச்சினைகளை எமது சிறார்களுக்கு இட்டுச் செல்லாது உரிமைகளைப் பெற சிறந்த சிந்தனை மாற்றத்தோடு தீர்க்க தரிசனமிக்க ஜனாதிபதி மஹிந்தவுக்கு வாக்களித்து தமிழர்களாகிய எமக்குள்ள பிரச்சினைகளைத் தீர்க்க முற்படுவோம் என்றார்.

0 Comments:
Post a Comment