'மட்டக்களப்பு தொடக்கம் பொத்துவில் வரையான பகுதி தமிழர்களின் தமிழகமாக
திகழ்ந்து வருகின்றது. தேசிய அரசியலில் இதுவரை பார்வையாளர்களாக இருந்த
தமிழ்மக்கள் பங்காளியாகமாற வேண்டும். அதனூடாக கிழக்கு மாகாணத்தில் பாரிய
பொருளாதார மாற்றங்கள் ஏற்படவேண்டும். அவ்வாறில்லையெனில் அடக்கப்பட்ட
சமூகமாக நாம் வாழ்வதை யாரும் தடுக்க முடியாது' என மட்டக்களப்பு மாவட்ட
சுதந்திர கட்சியின் அமைப்பாளாரும் ஜனாபதியின் இணைப்பாளருமான அருண்
தம்பிமுத்து தெரிவித்தார்.
அம்பாறை, கோளாவில் பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
'கடந்த காலங்களில் கிழக்கு மக்கள் எதிர்கட்சிக்கு வாக்களித்த போதிலும் அரசாங்கம் அபிவிருத்தி திட்டங்களை கைவிடவில்லை.
யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னர் வீதிகள், பாலங்கள், கட்டடங்கள், தொழில் வாய்ப்புக்கள், வாழ்வாதார அபிவிருத்திகள் என பல்வேறு திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.
இருந்தபோதிலும் ஆலையடிவேம்பு பிரதேசம் முறையாக அபிவிருத்தி செய்யப்படவில்லை என்பதை உணர முடிகின்றது. இதற்கு தேசிய அரசியல் காரணமல்ல. உங்களால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டு அனுப்பி வைக்கப்பட்ட அரசியல் தலைமைகளே காரணம்.
யாழ்ப்பாணத்தில் தொழிற்சாலைகள், தொழிற்பேட்டைகள் உருவாக்கப்பட்டுள்ளது. அதனூடாக ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகள் வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர். அவ்வாறு கிழக்கிலும் உருவாக வேண்டும். அதற்காக அபிவிருத்தியை முன்னெடுக்கக்கூடிய தமிழர்களுக்கு ஏற்படும் அநீதிகளை தட்டிக்கேட்கும் தலைமையுள்ள தகுதியானவர்களை நீங்கள் நாடாளுமன்றம் அனுப்ப வேண்டும்' என அவர் மேலும் தெரிவித்தார்.

0 Comments:
Post a Comment