மட்டக்களப்பு
மண்முனை வடக்குப் பிரதேச செயலாளர் பிரிவுக்க உட்பட்ட கிராம சேவையாளர்
பிரிவகளில் சமார் 190 இலட்சம் ரூபா விசேட நிதி ஒதுக்கிடு மூலம்
ஆரம்பிக்கப்பட்ட துரித அபிவிருத்திப் பணிகளை முன்னாள் முதல்வர்
சி.சந்திரகாந்தன் பார்வையிட்டார்.
முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகரும் மாகாணசபை
உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான
சி.சந்திரகாந்தனின் வேண்டுகோளிற்கு அமைய பொரளாதார அமைச்சர் பசில் ராஜபக்ச
மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தின் பிராந்திய அபிவிருத்தித் திட்டத்தின் கீழ்
ஆயிரம் இலட்ஷம் (100 மில்லியன்) ரூபா விசேட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்கு 19 மில்லியன் ரூபாய்களில் அபிவிருத்திப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
கல்லடி கடற்கரை விளையாடட்டு மைதானம், பனிச்சயடி விளையாட்டு மைதானம்,
கல்லடி வீதிகள்,கொக்குவில் உள்ளிட்ட வீதிகளும் அபிவிருத்தி
செய்யப்படுவதுடன் பெண்களின் வாழ்வாதார வலுவாக்கத்திற்காக சுமார் 10
மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
0 Comments:
Post a Comment