மட்டக்களப்பு மாவட்டம் போரதிவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தும்பங்கேணி - இளைஞர் விவசாயத்திட்டம் எனும் கிராமத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (21) மாலை காட்டு யானையின் தாக்குதலுக்கிலக்காகி பெண்ணெருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் அறியவருவதாவது……
நேற்று மாலை 6.30 மணியளவில் தனது வீட்டிலிருந்து அதே கிராமத்தினுள் தனது உணவினர் ஒருவரின் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த வேளையில் வீதியருகில் மறைவாக நின்ற காட்டு யானை இக்குறித்த பெண் மீது தாக்குதல் நடாத்தியுள்ளது.
இதில் படுகாயமடைந்தவர் செல்லத்துரை தங்கம்மா வயது 56 என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
காட்டு யானையின் தாக்குதலுக்கள்ளான குறித்த பெண் கால் ஒன்று உடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமத்திக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக வேண்டி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப் பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தயிசாலை நிருவாகத்தினர் கூறினர்.
இந்நிலையில் நேற்று (21) அதிகாலை பனிச்சையடி முன்மாரி கிராமத்தினுள் புகுந்த 4 காட்டு யானைகள் அக்கிராமத்திலிருந்த 2 ஏக்கர் கொண்ட மரவள்ளி தோட்டம் ஒன்றினை முற்றாக அழித்துள்ளதாகவும், அக்கிராமத்தவர்கள் தெரிவித்தானர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பிரதேசத்தில் காட்டு யானைகளின் தாக்குதல்களும், அட்டகாசங்களும் தொடர்ந்த வண்ணமுள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.
0 Comments:
Post a Comment