அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, கல்முனை பிரதான வீதிக்கருகில் பல
வருடங்களுக்கு முன்னர் நிர்மாணிக்கப்பட்ட பிரதான வடிகான், இதுவரையில்
பூர்த்தி செய்யப்படாமல், நீர் வடிந்தோட முடியாத நிலையில் காணப்படுவதால்,
பொதுமக்கள் போக்குவரத்தில் ஈடுபட முடியாத நிலை காணப்படுவதாகவும் அதை
புனரமைக்க நடவடிக்கை எடுக்குமாறும் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தற்போது மழைகாலம் ஆரம்பித்துள்ள நிலையில், நீர் வடிந்தோட முடியாது தேங்கி நிற்பதால், அப்பிரதேசத்தின் பல இடங்கள் டெங்கு பரவக்கூடிய நிலையில் காணப்படுகின்றது.
மேலும், நீண்ட காலமாக அட்டாளைச்சேனை பிரதேச அபிவிருத்தி ஓருங்கிணைப்பு குழுக்கூட்டங்களில் இவ்விடயம் தொடர்பாக ஆராயப்பட்டு, இவ்வடிகானை பூர்த்தி செய்யுமாறு ஒருங்கிணைப்பு குழு தலைவரும், உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா சம்மந்தப்பட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபையுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இவ்வடிகானை புனரமைப்பு செய்வதற்கான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டுமென பொது மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

0 Comments:
Post a Comment