10 Nov 2014

டெங்கு நுளம்புகளை அழிப்பதற்கான தேடுதல் வேட்டை

SHARE
 மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி சுகாதர வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட களுதாவளைப் பகுதியில் சனி, ஞாயிறு (08,09)ஆகிய இரு தினங்களும் டெங்கு நுளம்புகளை அழிப்பதற்கான விசேட நடவடிக்கைகளும்,  சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டதாக களுவாஞ்சிகுடி பிரதேச சுகாதர வைத்திய அதிகாரி எஸ்.கிருஷ்ணகுரார் கூறினார்.

களுவாஞ்சிகுடி பிரதேச சுகாதர வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் மே;றகொள்ளப்டும்  டெங்கு நுளம்புகளை அழிக்கும் செயற்பாடுகள் பற்றி இன்று மேற்படி வைத்திய அதிகாரியிடம தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்நடவடிக்கையின்போது களுதாவளைப் பகுதியிலிருந்து 3 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டனர். டெங்கு நுளம்புகள் இருந்த 20 மேற்பட்ட இடங்கள் இனங்காணப்பட்டு அழிக்கப்பட்டதோடு

டெங்கு நூளம்புகள் தங்குவதற்கு ஏதுவாக சூழலை வைத்திருந்ததாகக் கருதப்படும் 3 நபர்களுக்கு சட்டநடிவடிக்கை எடுத்துள்ளதோடு ஏனையோர் கடுமையாக எச்சரிக்கப் பட்டனர்.

டெங்கு நுளம்புகளை அழிப்பதற்கான இந்நடவடிக்கையின்போது  களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அலுவலக உத்தியோகஸ்தர்களுடன் இணைந்து களுவாஞ்சிகுடி பொலிசாரும் செயற்பட்டனர்.

டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக மிக அவசியமாகும். எனவே மக்கள் நுளம்புகள் பரவுவதற்கு ஏதுவான சூழலை வைத்திருக்கக் கூடாது. இனிமேலும் இப்பிரதேசத்தில் நுளம்பு பரவக்கூடிய சூழலை வைத்திருப்போர் இனங் காணப்பட்டால அவர்களுக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும். எனவும் களுவாஞ்சிகுடி பிரதேச சுகாதர வைத்திய அதிகாரி எஸ்.கிருஷ்ணகுரார் மேலும் கூறினார்.
SHARE

Author: verified_user

0 Comments: