வல்லமை உடையவர்களின் திறமைகளை பயன்படுத்தி எமது பகுதி அபிவிருத்திகளை மேம்படுத்துவதற்கு சரியான ஒரு அரசியல் தலைமை தேவை. இதுவரை தமிழினத்துக்கு சரியான அரசியற் தலைமை கிடைக்காமை தான் நாம் சந்தித்துவரும் அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம் – என யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கே.வி.குகேந்திரன் (வி.கே.ஜெகன்) தெரிவித்துள்ளார்.
மானிப்பாய் பகுதி இளைஞர் அணி அங்குரார்ப்பண நிகழ்வு (17.11)கடந்த திங்களன்று மானிப்பாய் பிரதேச எதிர்க்கட்சி தலைவர் ஜீவா தலைமையில் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் விருந்தினர்களாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாஇ யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வி.கே.ஜெகன் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் புதிதாக கட்டப்பட்ட இளைஞர் அணி உறுப்பினர்கள் முன்னிலையில் உரையாற்றுகையிலேயே ஒருங்கிணைப்பாளர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது –
இன்று உருவாக்கப்பட்டுள்ள இந்த இளைஞர் அணியானது மானிப்பாய் பகுதி அபிவிருத்தியின் சிற்பிகளாக இருக்கவேண்டம். ஒவ்வொரு இளைஞர் மனதிலும் தனது மக்கள் தனது ஊர் என்ற மனப்பாங்கு வளர்க்கப்பட்டால் எமது சமூக வளர்ச்சி தானாக வளர்க்கப்பட்டு விடும். கடந்த காலத்தில் பல இளைஞர் அமைப்புகள் உருவாக்கப்பட்டிருந்தன. ஆனால் அவை ஒவ்வொன்றும் தவறானவர்களது வழிநடத்தல்களால் திசைமாறி மிகமோசமான அழிவுகளை சந்திக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டனர் என்பது வரலாறு. ஆனால் இன்று உருவான உங்களது அமைப்பு ஒருபோதும் தவறான பாதையில் வழிநடத்தப்படமாட்டாது.
சமூகத்தினது அதிகளவான வளர்ச்சியை தூக்கிவிடும் சக்தியாக இளைஞர்களே விளங்குகின்றனர். தற்போது எமது இளைஞர்களைப் பொறுத்தளவில் அகிம்சைவழி ஆயுதவழி ஆகியவற்றை எதிர்கொண்டு மேசமான அழிவுகளைக் கடந்து வாழ்ந்துகொண்டிருக்கும் இளைஞர்கள். இருந்தும் தற்போது சில இளைஞர்கள்இ தேவையற்ற வழிகளில் திட்டமிட்ட வகையில் மாற்றப்பட்டுவருவது வேதனையாக உள்ளது. தற்போது வாள்வெட்டுக் கலாச்சாரம் எமது பகுதியில் தலைவிரித்தாடுகின்றது. போதைவஸ்து விநியோகம் தடல்புடலாக நடைபெறுகிறது. இவற்றைத் தடுத்துநிறுத்தவேண்டியது இளைஞர்களது பொறுப்பாகும். ஏற்கனவே அழிந்துபோன எமது இனம் எதற்காக மறுபடியும் இத்தகைய தீய வழிகளை நாடுகின்றனர் என நமக்கு நாமே கேட்கவேண்டிய கேள்வியாக உள்ளது.
24 மணி நேரமும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது கதவுகள் மக்களது சேவைக்காக திறந்திருக்கின்றது. ஆனால் தமிழர்களது ஒட்டுமொத்த அரசியல் அதிகாரங்களைக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சுயநலஅரசியல் மாயயை மக்களிடம் கட்டவிழ்த்துவிட்டு மக்களது அபிவிருத்தி பற்றி சிறிதளவேனும் சிந்திக்காது இருக்கின்றனர்.
குடாநாட்டு மக்கள் இதுவரைகாலமும் பெற்றுக் கொண்ட அபிவிருத்திகள் அனைத்தும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது இணக்க அரசியலூடாக பெற்றுக் கொண்டவைதான். மக்களது நலனுக்காக அரசுடன் இணைந்து அமைச்சரால் செயற்படமுடியுமாக இருந்தால் தமிழ் மக்களது பிரதிநிதிகளெனக் கூறும் போலித்தேசியவாதிகளால் ஏன் மக்களுக்கு சேவைசெய்யமுடியாமல் உள்ளது என சிந்தித்துப் பாருங்கள். மக்களை அவர்கள் ஒருபோதும் நேசிப்பது கிடையாது. இதுதான் உண்மையான நிலை. இதனால் தான் நிரந்தர தீர்வு வரும்போதெல்லாம் தட்டிக்களித்து தமது சுயநலஅரசியலை நகர்த்திவருகின்றனர்.
உலக நீரோட்டத்திற்கு ஏற்ப போராட்ட வியூகங்களில் மாற்றம் செய்யாது தன்னிச்சையாக செயற்பட்டதன் விழைவுதான் தமிழர்களது ஆயுதப்போராட்டம் சிதைக்கப்பட்டது. தமிழர்களது அபிவிருத்திகளையும் தேவைகளையும் பூர்த்தி செய்யாது உலக நாடுகளிடம் போர்க்குற்ற விசாரணையை மேற்கொள்ளுங்கள் என புலம்பித்திரிவதனால் தமிழர்கள் இழந்தவற்றையெல்லாம் பெறமுடியுமா? மக்களைத் தொடர்ந்தும் ஏமாற்றி உணர்வுகளைத் தூண்டிக் கொண்டிருப்பதனால் தான் தீர்வு கிடைத்துவிடுமா? இவற்றை மக்கள் தெளிவாகச் சிந்தித்து உருப்படியான வழிகளைத் தேடவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். தொடர்ந்தும் இனவாதத்தையும் தேசியவாதத்தையும் தூக்கிப்பிடித்துக் கொண்டிருப்பதனால் பகைமையைத்தான் வளர்க்க முடியும்.
இளைஞர்களே! நான் கடந்து போனவற்ரை உங்களிடம் கூறுவது நீங்கள் ஒருபோதும் ஆயுதக்கலாச்சாரத்திற்கு செல்லக்கூடாது என்பதற்காகத்தான் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். வல்லமை கொண்ட இளைஞர்களது கரங்களைக் கொண்டு அழிந்துபோன எமது தேசத்தை கட்டியெழுப்ப அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா என்றும் உங்களுடன் இருப்பார். அவரது கரங்களை பலப்படுத்த வேண்டியது உங்களது கரங்களிலேயே இருக்கின்றது என்றார்.
இந்த இளைஞர் அணி செ.றொபின்சன் தலைமையில் ஒவ்வொரு கிராமசேவகர் பிரிவை உள்ளடக்கிய 29 உறுப்பினர்களையும் கொண்டதாக உருவாக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் மானிப்பாய் பிரதேச எதிர்க்கட்சித்தலைவர் ஜீவா மற்றும் கட்சி உறுப்பினர்கள் பொதுச்சபை உறுப்பினர்கள் ஆகியோருடன் 100ற்கு மேற்பட்ட இளைஞர் அணி உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment