30 Nov 2014

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கிண்ணியா பிரதேசத்தில் 40 ஆயிரத்து 889 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக கிண்ணியா பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

SHARE
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கிண்ணியா பிரதேசத்தில் 40 ஆயிரத்து 889 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக கிண்ணியா பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

கிண்ணியா பிரதேசத்தில் தேசிய அடையாள அட்டை இல்லாதோர் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்தற்கு வசதியாக  அவர்களுக்குரிய தேசிய அடையாள அட்டையைப விரைவாகப் பெற்றுக் கொடுக்க  உரிய நடவடிக்கை எடுக்கப்ட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்வதற்காக கபே அமைப்பினால் நேற்றும் இன்றும் ஏற்பாடு செய்யப்பட்ட நடமாடும் சேவையின் இறுதி நாளான  சனிக்கிழமை (29), கிண்ணியா அல் அமீன் வித்தியாலயத்தல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர்  தொடர்ந்து; தெரிவிக்கையில்,

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கிண்ணியா பிரதேசத்தில் 40 ஆயிரத்து 889 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

கிண்ணியா பிரதேச செயலகத்தில் நடைபெற்ற நடமாடும் சேவையின் போது தேசிய அடையாள அட்டைக்காக 1,200 விண்ணப்பங்கள் கிடக்கப்பெற்றன. இன்று(நேற்று) சூரங்கல் அல் அமின் வித்தியாலயத்தில் நடைபெற்ற நடமாடும் சேவையின் போது தேசிய அடையாள அட்டைக்காக 800 விண்ணப்பங்கள்  கிடைக்கப்பெற்றன.

இதன்மூலம் மொத்தம் 2,000 விண்ணப்பங்ளையும் ஆட்பதிவுத் திணைக்களத்துக்கு அனுப்பிவைத்துள்ளோம். அத்துடன் 130 பேருக்கு தேர்தலில் வாக்களிப்பதற்காக இதே இடத்தில் வைத்து முதியோர் அடையாள அட்டை வழங்கப்பட்டது.

முற்றிலும் இலவசமாக  மக்களுக்கு நடாத்தப்பட்ட இந்த நடமாடும் சேவையின் மூலம் வாக்காளர்களுக்கு தேசிய அடையாள அட்டையின் முக்கியத்துவம் குறித்து விளிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது.

இதற்காக  கபே அமைப்பிற்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

இந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கபே அமைப்பின் தேசிய அமைப்பாளர் அகமட் மனாஸ் மஹ்சீன் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையில்,

தேசிய ரீதியில் 9 இலட்சம் பேர் தேசிய அடையாள  அட்டை பெறாமல் உள்ளனர். தேர்தல் திணைக்களத்தால் வாக்களிப்பதற்காக விதைந்துரைக்கப்பட்ட அவசியமான ஏழு வகையான ஆவணங்களும் இல்லாமல் நான்கு இலட்சம் பேர் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் 15,271 பேர் தேசிய அடையாள அட்டயின்றி உள்ளனர். தேர்தல் காலங்களிலும் அதற்கு முன்னரும் தேசிய அடையாள அட்டையின் முக்கியத்துவம் மக்களுக்கு தெரிவதில்லை. தேர்தல் அன்று வாக்களிப்பு நிலையத்;துக்குச் சென்ற போதே அதனுடைய முக்கியத்துவத்தை உணர்கின்றனர்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்கு வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக திருகோணமலை மாவட்டத்தில்  கடந்த 14ஆம் திகதி முதல் இவ்வாரான நடமாடும் சேவையை நடாத்தி வருகிறோம். தேர்தல் திணைக்களமும் ஆட்பதிவுத் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த வேலைத்திட்டத்தை கபே அமைப்பு நடாத்தி வருகின்றது.

நாளையும்(ஞாயிற்றுக்கிழ
மை) நாளைமறுதினமும்(திங்கட்கிழமை) திருகோணமலை குச்சவெளிப் பிரதேசத்தலும் நாவற்சோலையிலும் இந்த நடமாடும் சேவை நடைபெறவுள்ளது என்றும் தெரிவித்தார்.
SHARE

Author: verified_user

0 Comments: