16 Nov 2014

சுயம்பு நூல் 3வும்இ கொம்புமுறி இறுவட்டு வெளியீடும்

SHARE

(துசா)
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகமும், கலாசார பேரவையும் இணைந்து நடாத்திய சுயம்பு – 3 நூல் வெளியீடும், கொம்புமுறி விளையாட்டு இறுவட்டு வெளியீடும் வெள்ளிக்கிழமை (14) நடைபெற்றது.

கலாசார பேரவைத் தலைவரும், பிரதேச செயலாளருமாகிய திருமதி.சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் தலைமையில் கொக்கட்டிச்சேலை கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன் போது பல்வேறு கலைநிகழ்வுகளும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எஸ்.சிறிநாத், மண்முனை தென்மேற்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் ந.தயாசீலன், பிரதேச செயலக கணக்காளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், வாழ்வின் எழுச்சி முகாமையாளர், பிரதேச செலயக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் உட்பட கலைஞர்களும் கலந்து கொண்டிருந்தனர்.







SHARE

Author: verified_user

0 Comments: