29 Nov 2014

சேவையின் சிகரம் ஸ்ரீமத் சுவாமி நடராஜானந்தரின் 111ஆவது ஜனன தினம்

SHARE
சேவையின் சிகரம் ஸ்ரீமத் சுவாமி நடராஜானந்தரின் 111ஆவது ஜனன தினம் காரைதீவு இந்து சமய விருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று வெள்ளிக்கிழமை (28) சிறப்பாக இடம்பெற்றது.

ஜனன தினத்தை முன்னிட்டு காரைதீவு பிரதேச செயலகம் முன்பாக அமையப்பெற்றுள்ள அன்னாரது உருவச் சிலைக்கு முன்பாக விஷேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதுடன் மலர் மாலை அணிவிக்கப்பட்டு பாராயணம் செய்யும் நிகழ்வு இடம்பெற்றது.

1903ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29ஆம் திகதி கதிர்காமத் தம்பி விதானையார் - மயிலம்மா தம்பதிகளுக்கு பிறந்த ஸ்ரீமத் சுவாமி நடராஜானந்தர் பல்வேறு துறைகளில், பிரகாசித்து 1967ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18ஆம் திகதி ஸ்ரீ இராமகிருஷ்ண பரஹம்சரின் திருவுருவப்படத்தை மார்பில் தாங்கிய வண்ணம் இறையடி சேர்ந்தார்.

காரைதீவு இந்து சமய விருத்தி சங்கத்தின் தலைவர் எஸ்.மணிமாறன் தலைமையில் இடம்பெற்ற ஜனன தின நிகழ்வில் மட்டக்களப்பு, காரைதீவு இராமகிருஷ்ண மிஷன் பொறுப்பாளர் ஸ்ரீமத் சுவாமி சதுர்புஜானந்தஜீ மகராஜீ, இந்து சமய விருத்தி சங்கத்தின் செயலாளர் கே.ஜெயராஜி, பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் பி.சிவானந்தம் உட்பட காரைதீவு சகல ஆலயங்களின் தர்ம கத்தாக்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
SHARE

Author: verified_user

0 Comments: