(துசாந்தன்)
பட்டிப்பளைப் பிரதேச செயலகத்தினால் பிரதேசத்தில் உள்ள அறநெறிப்பாடசாலை அதிபர் ஆசிரியர்கள்இ மாணவர்களுக்குமான தியானப்பயிற்சி பிரதேச கலாசார மண்டபத்தில் நேற்று (01) நடைபெற்றது.
பட்டிப்பளை பிரதேச பிரதேச செயலாளர் திருமதி.சிவப்பிரியா - வில்வரெத்தினம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதேச கலாசார உத்தியோகத்தர் திருமதி.வளர்மதி-ராஜ் கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்களான தங்கவடிவேல்-மேகலா மற்றும்இ முத்துக்குமாரன்-ஜயந்தாஇ பட்டிப்பளைப் பிரதேசத்தில் இயங்குகின்ற அறநெறி பாடசாலை அதிபர்கள்இ ஆசிரியர்கள்இ 11ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் என பலர் இதில் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கும்இ ஆசிரியர்களுக்கும் தியனப் பயிற்சி வழங்கப்பட்டதோடு மேற்கொண்டு இதனை எவ்வாறு முன்னெடுத்துச் செல்வது எனவும் ஏனைய அறநெறிப் பாடசாலை மணவர்களுக்கும் தொடர்ந்து வரும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெறும் அறநெறிப் பாடசாலைகளிலும் இதனை எவ்வாறு முன்னெடுத்துச் செல்வது எனவும் பயிற்சிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்
0 Comments:
Post a Comment