(சக்தி)
களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் சட்டரீதியற்ற முறையில் இளவயது திருமணத்திற்கு முயற்சித்தார்கள் என்ற ரீதியில் இருவரை நேற்று முன்தினம் (01) கைது செய்துள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரித்தனர்.
16 வயதுடைய யுவதி ஒருவரையும் 24 வயுடைய இளைஞன் ஒருனையும் இவ்வாறு கைது செய்துள்ளதாகவும், விசாரணையின் பின்னர் யுவதியினை பெற்றோரிடம ஒப்படைத்திள்ளதாகவும், இளைஞனை நீதிமன்னில் அஜர் படுத்தவுள்ளதாகவும் களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தார்.
காதல் விவகாரமே இவர்களது இவ்வாறான செயற்பாட்டிற்கு காரணம் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment