3 Mar 2014

அணைக்கட்டு அமைத்துத்தருமாறு விவசாயிகள் கோரிக்கை

SHARE
(மட்டு.சுரேஸ்)
 மட்டக்களப்பு-வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவின் காஞ்சிரங்குடா கிராம சேவகர் பகுதிக்குட்பட்ட பெரியகாலபோட்டமடு ஆற்றிற்கு குறுக்காக அணைக்கட்டு ஒன்றினை அமைத்துத் தருமாறு அப்பகுதிவாழ் பொதுமக்ளும் விவசாயிகளும், வேண்டுகோழ் விடுக்கின்றனர்.
75 குடும்பங்கள் வசித்து இக்கிராமத்தினைச் சூழ சுமார் 700 ஏக்கர்களுக்கு அதிகமான நெல் வயல்கள் அங்கு காணப்படுகின்றது. அக்கிராம மக்கள் தமது வாழ்வாதாரமாக வேளாண்மைச் செய்கையினையே மேற்கொண்டு வருகின்றர்.
இவ்வாற்றிற்கு குறுக்காக அணைக்கட்டு அமையுமிடத்து மேலும் அதிகமாக ஏக்கர் நெல்வயல்கள் செய்கை பண்ணலாம் எனவும், இந்த அணைக்கட்டினைப் பயன்படுத்தி வயல் வெளிக்குச் செல்லும் பாதையினையும் ஏற்படத்தலாம் எனவும் அப்பகுதிவாழ் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
அந்த வகையில் இப்பிரதேசத்தில் விவசாய மக்களின் எதிர் கால நன்மை கருத்தி பெரியகால போட்டமடு ஆற்றிற்கு அணைக்கட்டு அமைத்துத் தருமாறு அப்பகுதி மக்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் வேண்டுகோழ் விடுக்கின்றனர்.






SHARE

Author: verified_user

0 Comments: