(மட்டு.சுரேஸ்)
மட்டக்களப்பு கிருஸ்தவ இளைஞர் மன்றத்தின் ‘வாழ்வோசை’ செவிப்புலன் அற்றப் பாடசாலை மாணவர்களுக்கான வருடாந்த விளையாட்டுப் போட்டி பாடசாலை முன்றலில் அதிபர் திருமதி. சீ.எஸ்.டேவீட் அவர்களின் தலைமையில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மாவட்ட கிருஸ்தவ இளைஞர் மன்றத்தின் செயலாளர் திரு. டீ.டீ டேவீட் அவர்கள் அவர்கள் கலந்து கொண்டதுடன் கல்விகற்கும் மாணவர்களினது பெற்றோர்களும் கிருஸ்தவ இளைஞர் மன்றத்தின் நலன் விரும்பிகளும் கலந்து கொண்டனர். இப்போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன.
அத்துடன் இந்நிகழ்வில் இடம் பெற்ற போட்டிகளில் மாணவர்கள் பங்குபற்றுவதையும் விநோத உடைப் போட்டியில் பங்குபற்றுவதையும் படத்தில் காணலாம்.
0 Comments:
Post a Comment