(சக்தி)
தற்போது கிழக்கு மாகாகணத்திலே மாகாணசபை ஒன்று இருக்கின்றதா என்ற சந்தேகம் கூட வந்துள்ளது. கிழக்கு மாகாணசபையின் செயற்பாடு தற்போது உறங்கல் நிலையினை அடைந்துள்ளது. எவ்விதமான வேலைத் திட்டங்களும் இல்லாத நிலையிலேதான் தற்போது சென்று கொண்டிருக்கின்றது. கடந்த வருடம் கூட 41 வீதமான நிதிகள் மாத்திரமே கிழக்கு மாகாண சபையினால் செலவு செய்பட்டன ஏனைய நிதி செலவு செய்யப்பட வில்லை இது எம்மைப் பொறுத்த வரைக்கும் தாங்க முடியாத ஒரு செய்தியாக இருக்கின்றது
என கிழக்கு மாகண முன்னாள் முதலமைச்சரும், ஜனாதிபதியின் அலோசகரும், தற்போதைய கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவசேதுரை சந்திரகாந்தன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் திங்கட் கிழமை (10) மட்.ஆனைகட்டியவெளி நாமகள் வித்தியாலயத்தில் நடைபெற்ற வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகைலேதான் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்குகையில்
தமிழ் சமூகம் மிக நீண்டகாலமாக போர் சூழல் காரணமாகவும் இயற்கைச் சூழல் காரணமாகவும் மிகவு மோசமான சம்பவங்களை கடந்த காலங்களில் சந்திர்த்திருந்தது. ஆனால் தற்போதைய சூழலில் எமது சமூகம் கல்வி ரீதியான முன்னேற்றம் உட்பட ஏனைய அனைத்து விடயங்களிலும் முன்னேற்றம் காண்பதற்கு தொடர்ந்து அவதானம் செலுத்த வேண்டும்.
தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தினைப் பொறுத்த வரையில் மக்கள் மத்தியில் ஒரு பரந்துபட்ட விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கின்றது. இதனை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. இருந்த போதிலும் கல்வி கற்ற சமூகத்திடமும் அரசியல் வாதிகளிடமும் இந்த மாற்றம் மேலும் வருமாக இருந்தால் மாவட்டத்தில் இன்னும் பாரிய அபிவிருத்திகளை மேற்கொள்ள முடியும். மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரியதொரு கல்வி மாற்றத்தினை ஏற்படுத்த நாங்கள் அனைவரும் முன்நிற்க வேண்டும்
தமிழ் மக்கள் கடந்த காலங்களில் கல்வித் துறையில் முன்நிலையில் திகழ்ந்திருக்கின்றார்கள் கடந்த போராட்டத்திற்குப் பின்னர் சற்று வீழ்ச்சிப் போக்கைச் சந்தித்திருக்கின்றது. தற்போது அவை படிப்படியாக வளர்ச்சியடைந்து வருகின்றது. குறிப்பாக மட்.பட்டிருப்பு கல்வி வலயத்தினைப் பொறுத்த வரையில் கல்வி வளர்ச்சி வீதம் அதிகரித்துக் கொண்டு செல்கின்றது.
ஆனால் மட்டக்களப்பு நகரத்திலே பாடசாலைகளில் கற்கிற்ற மாணவர்களில் 5ஆம், 6ஆம் ஆண்டு கற்கும் மாணவர்கள் எழுத வாசிக்கத் தெரியாத மாணவர்கள் இருக்கின்றார்கள். ஆனால் ஆரிசியர்களின் எண்ணிக்கை 85 வீதமானவர்கள் இருக்கின்றார்கள். இது விடயமாக பெற்றோர்களும் அசிரியர்களும் மிகுந்த அவதானம் செலுத்த வேண்டும். இந்த நாட்டிலே எழுத வாசிக்கத்த தெரிந்த சூழலையாவது உருவாக்கிக் கொடுக்க வேண்டும். சமூகப்பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கின்றன அவற்றினை எதிர்கொண்டு பிள்ளைகள் சிறந்த முறையில் கற்கவேண்டும். மட்டக்களப்பிலே இருக்கின்ற ஒரு மாணவர் தனது சகல வளங்களிலும் பூர்த்தி கிடைத்தால் அவர் கொழும்பிலே சென்று பிரபலமான பாடசாலையில் கல்வி கற்பான். ஆனால் இங்குள்ள ஆசிரியர்கள் கஸ்ட்டப்பட்ட பிள்ளைகளுக்கு தமது கற்றலை காண்பிப்பதுதான் சாலப் பொருத்தமாக அமைகின்றது.
எமது சமூகத்தினை உயர்த்த வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்குள்ளும் இருக்கின்றது. முயர்ச்சி வடிவமான எண்ணத்தில் செயல் வடிவம் பெறுகின்றபோதுதான் அங்கு பிரமண்டமான மாற்றம் வரும். நாங்கள் பட்ட வறுமை, கஸ்டங்கள், போன்றவற்றினை எமது வருங்கால சந்ததியினரும் படக்கூடாது என்பதுதான் நம் எல்லோரினதும் குறிக்கோளாக இருக்கின்றது.
எதிர் வருகின்ற 2017, 2018 ஆம் ஆண்டளவில் எமது பிரதேசத்தில் காணப்படுகின்ற அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காணப்படல் வேண்டும் என்பதற்கு நாம் முயற்சித்து வருகின்றோம். இருந்த போதிலும் நமது நாட்டின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களின் ஆட்சிக் காலததிலே எமது பிரதேசத்திலும் கூட பாரிய அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த பிரதேசத்திலே வீதிகள் பணரமைப்புச் செய்ய வேண்டும், வீடுகள் கட்டவேண்டும், விளையாட்டு மைதானங்கள் புணரமைப்புச் செய்ய வேண்டும், ஆலயங்கள் புணரமைப்புச் செய்ய வேண்டும் என பல கோரிக்கைகளை மக்கள் என்னிடம் முன் வைத்துள்ளனர். இவ்விடயங்களையெல்லாம் எவ்வாறு தீர்த்து வைப்பது என்று இங்குள்ள பெற்றோர்கள்தான் சிந்திக்க வேண்டும்
மட்டக்களப்பு மாவட்டத்திலே குளங்கள் புணரமைப்பு, வாய்க்கால்கள் புணரமைப்பு, பாடசாலைகள் அபிவிருத்தி போன்றன புணரமைப்புக்கள் செய்ய வேண்டிய அதிகமான தேவைகள் இருக்கின்றன.
இவ்வருடம் அபிவிருத்திக்கான நிதி ஒதுக்கீட்டிலே கடந்த கால தேர்தல் முடிவுகளை வைத்துக் கொண்டுதான் நிதிகள் வந்தன அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்திற்குரிய நிதி ஒதுக்கீடு குறைக்கப் பட்டுள்ளது. அந்த வகையில் பெற்றோர்கள் அரசியல் ரீத்தியான மாற்றத்தினைப் பற்றிச் சிந்திக்க வேண்டும் இவ்வருடத்திலும் தேர்தல்கள் வரலாம். அவ்வாறு வருகின்ற பொழுது தேர்தலில் அரசாங்கத்திற்கு எதிராக வாக்களித்துவிட்டு அரசாங்கத்திடமிருந்து அபிவிருத்திகளை எதிர் பார்ப்பது என்பது ஒரு கடினமான விடயம்.
தற்போது கிழக்கு மாகாகணத்திலே மாகாணசபை ஒன்று இருக்கின்றதா என்ற சந்தேகம் கூட வந்துள்ளது. கிழக்கு மாகாணசபையின் செயற்பாடு தற்போது உறங்கல் நிலையினை அடைந்துள்ளது. எவ்விதமான வேலைத் திட்டங்களுமில்லை கடந்த வருடம் கூட 41 வீதமான நிதிகள் மாத்திரம்தான் கிழக்கு மாகாணசபையினால் செலவு செய்பட்டன ஏனையவை செலவு செய்யப் பட்வில்லை இது எம்மைப் பொறுத்த வரைக்கும் தாங்க முடியாத ஒரு செய்தியாக இருக்கின்றது.
கடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் வடக்கிலிருந்து வந்தார்கள உரிமை உரிமை என்று கத்தினார்கள் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புகுக்கு வாக்களித்தார்கள் ஆனால் தமிழ் மக்கள் ஆள வேண்டிய இடத்தில் போய் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எதிர்க் கட்சியாக இருக்கின்றார்கள்.
தற்போது வடமாகாணசபைக்கு மாத்திரம் அதிகாரம் வழங்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையில் கூறுகின்றார்கள் கிழக்கினைப் பற்றி சிந்திக்கின்றார்களில்லை. தமிழ் அரசியல் தலைமைகளும் தங்களுடைய ஆசனங்களை மாத்திரம் தக்க வைதுக்கொள்ள சிந்திக்கின்றார்களே தவிர கிழக்கு மாகாணத்தின் தன்மை என்ன, நிலப்பரப்பு என்ன, சனத்தொகை விகிதாசாரம் என்ன, என பார்க்கின்றார்களில்லை.
அண்மையில் வழங்கப்பட்ட அரச நியமனங்களில் மட்டக்களப்பு மாவட்டத்திலே ஒரு தமிழருக்கும் கிடைக்கவில்லை என்ற செய்திகள் வெளிவந்தள்ளன. இவைகளௌல்லாம் தமிழ் மக்களுக்கு அரசியல் பலம் இல்லாத காரணத்தினால்தான் வருகின்றன என்பதனை விளங்கிக் கொள்ள வேண்டும். இதனை எமது மக்கள் விளங்கிக் கொள்ளும் வரைக்கும் எம்மக்களின் பிரச்சனைகள் தீரதாது.
போராடியவர்கள், உரிமை கேட்டவர்கள், கஸ்டப்பட்வர்கள் என அனைவரும் இருக்க வேறு யாரோ ஒருவர் வந்து ஆட்சியினை நடாத்திக் கொண்டிருக்க நாம் பார்திருக்கும் காலத்திற்கு நாம் ஆளாகி விடக்கூடாது. இவைகளனைத்தும் கசப்பான விடயங்களாக இருக்கக் கூடாது.
உலகமயமாக்கல் எனும் போர்வையில் கிரமப் புறக்களில் மம்கள் அதிளவு கவர்ச்சிப் பொருட்களை நாடுவதும், சேமிப்புப் பழக்கத்தை அறவே இல்லாமல் செய்தும் தேவையற்ற பிரச்சனைகளுக்கு ஆளாவதுவுமாக இருக்கக் கூடாது.
எனவே எமது மூதாதையர்கள் காட்டித்தந்த உணவுப் பழக்க வழக்கங்களிலும் , செயற்பாடுகளிலும் ஆர்வம் காட்டிக்கொள்ள வேண்டும். கிராமம் என்றால் கிராமத்தின் பாணியில வாழப் பழகிக் கொள்ள வேண்டும். சேமிப்பினை அதிகரிக்க வேண்டும், மாறாக கடன் பட்டர்களாக, கடனை அடைக்க முடியாதர்களாக மாறக்கூடாது. எதிர காலத்தில் நல்லதொரு அபிவிருத்தி சார்ந்த கற்ற சமூகத்தினை வருhக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment