(சக்தி)
இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் போரதீவுப்பற்று பிரிவு அனர்த்த பதிலீட்டுகுழுத் தொண்டர்களுக்கு சங்கத்தின் யாப்பு விதிகளை விளக்குதல் தொடர்பிலான செயலமர்வு ஒன்று கடந்த 26 அன்று வெல்லாவெளியில் அமைந்துள்ள பிரிவுக் காரியாலயத்தில் நடைபெற்றது.
பிரிவு செயலாளர் தெ.சிவபாதம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அனர்த்த வேளையிலும் அனர்த்திற்கு முன்பும் அனர்த்தத்திற்கு பின்னரும் எவ்வாறு தொண்டர்கள் சேவை புரிய வேண்டும் எனவும், இது தொடர்பாக யாப்பு விதிகளில் எவ்வாறான விதிமுறைகள் கூறப் பட்டுள்ளது எனவும் விளக்கமளிக்கப்பட்டன.
மேற்படி சங்கத்தின் போரதிவுப்பற்று பிரிவு அனர்த்த பதிலீட்டுக்குழு உறுப்பினர்கள், மற்றும், நிருவாகத்தினரும் இதில் கலந்து கொண்டிருந்தனர்.
இந்நிகழ்வில் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளைத் தலைவர் த.வசந்தராசா முதலுதவிப் பயற்றுவிப்பாளர் ச.கணேசலிங்கம் அகியோர் கலந்து கொண்டு தொண்டர்களுக்கு விளக்கமளித்தனர்
0 Comments:
Post a Comment