(விது)
மண்டூர் பொது நூலக வாசகர் வட்டம் நடாத்திய தேசிய வாசிப்பு மாத பரிசளிப்பு விழா வாசகர் வட்டத்தலைவர் .சோ.இளந்திரையன் தலைமையில் கடந்த 11 அன்று நூலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
இந்த நிகழ்வில் மட்டகளப்பு பிராந்திய உள்ளூராட்சி ஆணையாளர் க.சித்திரவேல்இ போரதீவுப்பற்று பிரதேச சபை செயலாளர் சோ.குபேரன்இ பட்டிருப்பு கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாள்ளர் மு.விமலநாதன் உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்தனர்.
இதன்போது பாடசாலை மணவர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் அதிதிகளின் சிறப்பு உரைகளும் இடம் பெற்றன.
இந்நிகழ்வின்போது 2013ஆம் ஆண்டில் மண்ரூரிலிருந்து 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சயில் சித்தியடைந்த மாணவர்களுக்கும்இ பல்கலக்கழக மருத்துவ பீடத்துக்கு தெரிவான மாணவர்களுக்கும் மற்றும் வாசகர் வட்டம் நடாத்திய போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கும் பரிசீல்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத் தக்கதாகும்.
0 Comments:
Post a Comment